PulseNews
லைஃப் ஸ்டைல்

இருக்கண்குடி மாரியம்மன் கோயிலில் ரூ.23.67 கோடி வசதிகள் திறப்பு: பக்தர்கள் மகிழ்ச்சி!

விருதுநகர் மாவட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, அருள்மிகு இருக்கண்குடி மாரியம்மன் திருக்கோவிலில் ரூ.23.67 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய உட்கட்டமைப்பு வசதிகளை பக்தர்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

புதிய உட்கட்டமைப்பு வசதிகளை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர், அருள்மிகு இருக்கண்குடி மாரியம்மன் திருக்கோயிலில் பக்தர்களின் வசதிகளை மேம்படுத்தும் வகையில் ரூ.23.67 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள முடி காணிக்கை மண்டபம், அன்னதான மண்டபம், விருந்து மண்டபம், 235 கடைகள் உள்ளிட்ட பல்வேறு புதிய உட்கட்டமைப்பு வசதிகளை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் என்.ஓ.சுகபுத்ரா, அவர்கள் அருள்மிகு இருக்கண்குடி மாரியம்மன் திருக்கோயில் வளாகத்தில் குத்துவிளக்கேற்றி, புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடங்களை பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் என்.ஓ.சுகபுத்ரா, தெரிவித்ததாவது..," தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசு, திருக்கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதுடன், பழமையான திருக்கோயில்களின் ஆன்மிகப் பெருமையையும் பாதுகாத்து, அவற்றின் உட்கட்டமைப்பு வசதிகளை நவீனமயமாக்கும் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

தென் மாவட்டங்களில் புகழ்பெற்ற ஆன்மிகத் தலமாக விளங்கி வருகிறது

அருள்மிகு இருக்கண்குடி மாரியம்மன் திருக்கோவில் தென் மாவட்டங்களில் புகழ்பெற்ற ஆன்மிகத் தலமாக விளங்கி வருகிறது. இத்திருக்கோவிலுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து அம்மனை வழிபட்டு வருகின்றனர். குறிப்பாக திருவிழா மற்றும் முக்கிய விசேஷ நாட்களில் பக்தர்களின் வருகை அதிகரித்து வருவதால், அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு புதிய உட்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நவீன வசதிகளுடன் ரூ.2.23 கோடி மதிப்பீட்டில் முடி காணிக்கை மண்டபம்

அதன் ஒரு பகுதியாக, பக்தர்கள் நேர்த்திக்கடனான முடி காணிக்கை செலுத்துவதற்கான வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் நவீன வசதிகளுடன் ரூ.2.23 கோடி மதிப்பீட்டில் முடி காணிக்கை மண்டபமும், திருக்கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட முறையில் சுகாதாரமான மற்றும் வசதியான முறையில் அன்னதானம் வழங்கும் வகையில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் அன்னதான மண்டபமும்,
திருக்கோயில் சார்ந்த நிகழ்வுகள், தனியார் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும், திருக்கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்களின் பல்வேறு தேவைகளுக்கு பயன்படும் வகையிலும் ரூ.8.44 கோடி மதிப்பீட்டில் விருந்து மண்டபமும், திருக்கோவில் வளாகத்தில் உள்ள வணிக நடவடிக்கைகள் முறைப்படுத்தப்படுவதுடன், பக்தர்களுக்கு தேவையான பொருட்களை ஒரே இடத்தில் எளிதாக வாங்கிக் கொள்ளும் பொருட்டு ரூ.12 கோடி மதிப்பீட்டில் 235 கடைகளும் என மொத்தம் ரூ.23.67 கோடி மதிப்பீட்டில் புதிய உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

புதிய கட்டடங்கள் திறப்பு

இந்த புதிய கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டதன் மூலம், அருள்மிகு இருக்கண்குடி மாரியம்மன் திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு மேம்படுத்தப்பட்ட மற்றும் கூடுதல் வசதிகள் கிடைக்கின்றன. மேலும், திருக்கோவில் வளாகத்தின் பயன்பாட்டுத் திறன் மேம்படுவதுடன், பக்தர்களின் வருகையை ஒழுங்குபடுத்தவும், அவர்களுக்கு தேவையான சேவைகளை ஒருங்கிணைந்த முறையில் வழங்கவும் வழிவகை ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார். இந்நிகழ்வில் பரம்பரை அறங்காவலர் குழுத்தலைவர் திரு.ராமமூர்த்தி, செயல் அலுவலர் திரு.இளங்கோ, இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள், திருக்கோவில் நிர்வாகிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள், பக்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Abp News13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
இருக்கண்குடி மாரியம்மன் கோயிலில் ரூ.23.67 கோடி வசதிகள் திறப்பு: பக்தர்கள் மகிழ்ச்சி!
PulseNews சுருக்கம்

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகிலுள்ள அருள்மிகு இருக்கண்குடி மாரியம்மன் திருக்கோயிலில் பக்தர்களுக்கான புதிய உட்கட்டமைப்பு வசதிகளை தமிழக முதலமைச்சர் திறந்து வைத்துள்ளார். இந்த வசதிகள் மொத்தம் 23.67 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த புதிய கட்டுமானத் திட்டங்களை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் என்.ஓ.சுகபுத்ரா பக்தர்களின் பயன்பாட்டிற்காகத் தொடங்கி வைத்தார். கோயில் வளாகத்தில் மேம்படுத்தப்பட்ட இந்த வசதிகளால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#lifestyle