PulseNews
லைஃப் ஸ்டைல்

இந்தியர்களை வாழ்த்திய ரஷ்ய வீரர்கள்; விண்வெளியில் நெகிழ்ச்சி

வருகின்ற ஆகஸ்ட் 15 அன்று இந்தியா தனது 80 வது சுதந்திர தினத்தைக் கொண்டாட உள்ளது. இந்நிலையில், ரஷ்ய விண்வெளி வீரர்கள் இந்தியர்களுக்குச் சுதந்திர தின வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது உலக அளவில் கவனம் பெற்றுள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ள ரஷ்ய விண்வெளி வீரர்கள், இந்தியத் தேசியக்கொடியைக் கையில் ஏந்தியபடி இந்தியர்களுக்குச் சுதந்திர தின வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். அவர்கள் இந்தியாவிற்குச் சுதந்திர தின வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், இந்தியா-ரஷ்யா நட்புறவு குறித்தும் பேசியிருந்தனர். அவர்கள் பேசுகையில், “அன்பு நண்​பர்​களே, வரும் 15 ஆம் தேதி இந்​தியா தனது 80-வது சுதந்​திர தினத்​தைக் கொண்​டாடு​கிறது. இந்​தி​யர்​களுக்கு அமை​தி​யும், வளமும் கிடைக்க வாழ்த்​துகிறோம். காலனி ஆதிக்கத்​திலிருந்து இந்​தியா விடு​தலை பெற்​று, தன்​னிறைவு மற்றும் வளம் நோக்​கிய பாதை​யில் பயணிக்​கத் தொடங்​கியது” என்று தெரி​வித்​துள்​ளனர். அடுத்ததாகப் பேசிய ஆண்ட்ரே பெத்யாயேவ், இந்தியத் தேசிய கொடியை ஏந்தியபடி, ”இந்தியா-ரஷ்யா நட்பு நீடூழி வழ்க என்று வாழ்த்தினார். அதே நேரத்தில், கடந்த 1961 ஆம் ஆண்டு நவம்பரில் யூரி ககாரின் இந்தியாவிற்கு மேற்கொண்ட பயணம் சோவியத் யூனியனுக்கும், இந்தியாவிற்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்தியது. விண்வெளியில் இருந்து பார்க்கும் போது இந்தியா அழகாக இருக்கிறது. பூமியிலிருந்து பார்த்தால் அதைவிட அழகாக இருக்கிறது. இந்தியா என்பது உண்மையான நண்பர்கள் வசிக்கும் நாடு” என்றும் தெரிவித்தனர்.

Nakkheeran15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
இந்தியர்களை வாழ்த்திய ரஷ்ய வீரர்கள்; விண்வெளியில் நெகிழ்ச்சி
PulseNews சுருக்கம்

இந்தியா தனது 80-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் நிலையில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள ரஷ்ய விண்வெளி வீரர்கள் இந்தியர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். இந்தியக் கொடியைக் கையில் ஏந்தியபடி அவர்கள் விடுத்த இந்த வாழ்த்துச் செய்தி தற்போது உலக அளவில் கவனம் பெற்றுள்ளது.

இந்த நிகழ்வின் போது, ரஷ்ய விண்வெளி வீரர்கள் இந்தியா மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான நட்புறவு குறித்தும் பெருமிதத்துடன் பேசினர். விண்வெளியில் இருந்து விடுக்கப்பட்ட இந்த நெகிழ்ச்சியான சுதந்திர தின வாழ்த்துகள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளன.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#lifestyle