இந்த ஆண்டிற்கான தகைசால் தமிழர் விருது யாருக்கு?-சஸ்பென்ஸுடன் வெளியான அறிவிப்பு
நாளை நாட்டின் 80 ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட இருக்கிறது . தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமான விஜய் தேசியக் கொடியை கோட்டை கொத்தளத்தில் ஏற்ற உள்ளார். தொடர்ந்து பல்வேறு விருதுகளும் வழங்கப்பட இருக்கிறது. இந்தநிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமிக்கு இந்த ஆண்டிற்கான தலைசால் தமிழர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு முதல் இந்த விருதானது அரசியல் பெரும் தொண்டாற்றியவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 2021 ஆம் ஆண்டு முதன் முறையாக இடதுசாரி மூத்த தலைவர் சங்கரையாவிற்கு இந்த விருது வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கம்யூனிஸ்ட் மூத்த தலைவரும், சுதந்திரப்போராட்ட வீரருமான நல்லகண்ணுவிற்கு வழங்கப்பட்டது. அதன் பிறகு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு வழங்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு இவ்விருது வழங்கப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு இவ்விருதானது ஐயுஎம்எல் கட்சியின் காதர் மொய்தினுக்கு வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆறாவது ஆண்டாக இந்த ஆண்டு தகைசால் தமிழர் விருது முன்னாள் காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும், முன்னாள் எம்பியுமான கிருஷ்ணசாமிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் 80-வது சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவில் தமிழக முதல்வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறார். விழாவின் ஒரு பகுதியாக பல்வேறு விருதுகளும் வழங்கப்பட உள்ளன.
இந்த ஆண்டிற்கான தகைசால் தமிழர் விருது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரான கிருஷ்ணசாமிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் மற்றும் பொது சேவையில் சிறந்து விளங்குபவர்களுக்கு 2021-ம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.