PulseNews
லைஃப் ஸ்டைல்

பறிபோகும் வாக்குரிமை! பிரகாஷ்ராஜுக்கே இந்த கதி!

ஜ னநாயகத்தில் மக்களுக்கு கிடைத்திருக்கக்கூடிய மிகப்பெரிய ஆயுதம் என்பது வாக்குரிமை. 18 வயது நிரம்பிய ஆண், பெண், மாற்றுப் பாலினத்தவர் அனை வருக்குமே வாக்குரிமை வழங்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் வேலையாகும். ஆனால் அதற்கு மாறாக அண்மைக் காலமாக தேர்தல் ஆணையம் வாக்குரிமையை பறிக்கின்ற வேலையை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. பீகாரில் எஸ்.ஐ.ஆர். என்ற பெயரில் வாக்காளர் பட்டியல் மறுசீரமைப்பு என்ற நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு ஒரு கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் பட்டியலி லிருந்து நீக்கப்பட்டார்கள். அவர்களில் பெரும்பாலானவர் கள் முஸ்லிம்கள், பெண்கள், குடிசைப் பகுதிகளில் வாழ்பவர்கள். பீகார் மாநிலத்தில் பா.ஜ.க.வுக்கு எதிரான வாக்குகள் எங்கெல்லாம் இருக்கிறதோ, அந்தப் பகுதிகளிலெல்லாம் எஸ்.ஐ.ஆர். நடவடிக்கை மூலம் அவர்களுடைய வாக்குரிமை பறிக்கப்பட்டது. இதே நடவடிக்கை இந்தியா முழுவதும் மேற் கொள்ளப்படுவதாகக் கூறி, கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்காளம் ஆகிய மாநிலங்களில் மிகக்குறுகிய காலங்களில் மேற்கொள்ளப் பட்ட எஸ்.ஐ.ஆர். நடவடிக்கைகளால் 3 மாநிலங்களிலும் பா.ஜ.க. தன் கணக்குப்படி ஆளும் கட்சியை விரட்டிவிட்டு, மாற்று ஆட்சிக்கு வழிவகுத்தது. கர்நாடக மாநிலம் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகி வரு கின்ற நிலையில், அங்கு மேற்கொள்ளப்பட்ட எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையில் பிரபல நடிகரான பிரகாஷ்ராஜ் அவர்களுடைய பெயர், வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருப்பது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரகாஷ்ராஜ் நடிகராக மட்டுமில்லாமல், சமூகத்தின் மீது அக்கறைகொண்டும், மதவாதத்தை எதிர்த்தும், மொழித்திணிப்பை எதிர்த்தும், குறிப்பாக மத்திய பா.ஜ.க. அரசுடைய மக்கள் விரோத நட வடிக்கைகளைக் கண்டித்து தொடர்ந்து செயல்பட்டு வரு பவர். பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ், மதவாத கும்பலால் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து இயக்கமே நடத்தியவர். அண்மையில் டெல்லியில் கரப்பான் பூச்சி கட்சியினர் நடத்திய நீட் எதிர்ப்புப் போராட்டத்திலும் பங்கேற்று மக்களுடைய குரலாக ஒலித்தவர் நடிகர் பிரகாஷ்ராஜ். தேர்தல் வெற்றி, தோல்விகளைக் கடந்து பா.ஜ.க. எதிர்ப்பு என்பதில் உறுதியாக அவரது செயல்பாடு இருக்கிறது. ஒரு இந்தியனாக, நாட்டின் மீது உள்ள அக்கறையின் வெளிப்பாடாக அவரது குரல் ஒலித்துவரும் நிலையில்... பெங்களூரில் அவரது பெயர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருப்பது என்பது ஜனநாயக உரிமையை பறிக்கின்ற தேர்தல் ஆணையத்தின் மோசமான செயல்பாடாகும். பிரகாஷ்ராஜ் என்ற நடிகரை தமிழ்நாடும், பிற மாநிலங்களும் அறியும். பிரபலமான ஒருவரின் பெயரே நீக்கப்படுகிறதென்றால், சாதாரண மக்களின் நிலை என்ன? வாக்காளர் பட்டியலில் எத்தனை பேர் தங்களுடைய பெயரை மீட்க முடியும்? எஸ்.ஐ.ஆர். மட்டுமின்றி ஈ.வி.எம். வில்லங்கங் களும் நாடு முழுவதும் எதிரொலிக்கின்றன. கடந்த சட்ட மன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் முன்னாள் முதல்வரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தோல்வியடைய நேரிட்டது. அந்த தொகுதியில் பயன் படுத்தப் பட்ட ஈ.வி.எம். இயந்திரங்களை மறுஆய்வு செய்தநிலையில், 14 இயந்திரங்களில் 5 இயந்திரங்கள் பழுதாகியிருக்கின்றன. 14 இயந்திரங்களில் 5 என்பது 30 விழுக்காடாகும். எனவே ஒரு தொகுதியில் 30 விழுக்காடு அளவிற்கு இயந்திரங்களால் குளறுபடிகள், மோசடிகள் நடைபெறுகிறதென்றால், தேர்தல் ஆணையம் அதை கண்டுகொள்ளாமல் இருக்கின்ற நிலையில்... எந்த தொகுதியின் முடிவுகளிலும் எப்படி வேண்டுமானாலும் மாற்றமுடியும் என்ற அச்சம் அரசியல் கட்சிகளுக்கு மட்டுமல்ல... வாக்களித்த பொதுமக்களுக்கும் ஏற்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம், மீண்டும்... மீண்டும் வாக்குரிமையை பறிக்கின்ற வகையிலும், சந்தேகத்தை வலுப்படுத்தும் வகையிலும் செயல்பட்டுக்கொண் டிருக்கிறது. எதிர்காலத்தில் இந்தியாவில் தேர்தலே இல்லாமல் போகுமோ என்பதுதான் இப்போது மிஞ்சியுள்ள கேள்வி! (ஆசிரியர்)

Nakkheeran13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
பறிபோகும் வாக்குரிமை! பிரகாஷ்ராஜுக்கே இந்த கதி!
PulseNews சுருக்கம்

ஜனநாயகத்தின் அடிப்படை உரிமையான வாக்குரிமையை உறுதி செய்வது தேர்தல் ஆணையத்தின் கடமையாகும். ஆனால், தற்போது இந்த உரிமையைப் பறிக்கும் செயல்களில் தேர்தல் ஆணையம் ஈடுபடுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

பீகாரில் வாக்காளர் பட்டியல் மறுசீரமைப்பு என்ற பெயரில் ஒரு கோடிக்கும் அதிகமான வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இத்தகைய நடவடிக்கைகளால் பொதுமக்கள் ஜனநாயக ரீதியாகப் பாதிக்கப்படுவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#lifestyle