PulseNews
சினிமா

பெரிய பட்ஜெட் படம்; வில்லியாக களமிறங்கும் ஐஸ்வர்யா லெட்சுமி!

இயக்குநர் அட்லீ தற்போது அல்லு அர்ஜூனை வைத்து ‘ராக்கா’ எனும் தலைப்பில் ஒரு படம் இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்தில் தீபிகா படுகோனே நாயகியாக நடித்து வருகிறார். இவரைத் தவிர்த்து மிருணாள் தாக்கூர், ஜான்வி கபூர், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடிப்பதாக கூறப்படுகிறது. இதில் முக்கியமாக ராஷ்மிகா நெகட்டிவ் ரோலில் நடிப்பதாக சொல்கிறார்கள். படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார். சைன்ஸ் பிக்சன் மற்றும் ஃபேண்டஸி கலந்த ஜானரில் உருவாகுவதாகச் சொல்லப்படும் இந்த பிரம்மாண்ட பட்ஜெட் படம் ஒன்பது மொழிகளில் வெளியாகிறது. இப்படத்தில் ஏகப்பட்ட பிரபலங்கள் நடிப்பதாக தகவல்கள் வெளியான வண்ணம் இருக்கிறது. முதலில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. ஆனால் படக்குழு தரப்பில் அதை உறுதி செய்யவில்லை. பின்பு ஷாருக்கான் கேமியோ ரோலில் நடிப்பதாகத் தகவல் உலா வந்தது. இது குறித்தும் படக்குழு எந்த விளக்கம் அளிக்கவில்லை. ஆனால் இவர் நடிக்கவில்லை எனத் திரை வட்டாரங்கள் தெரிவித்தனர். சமீபத்தில் ஹாலிவுட் நடிகருடன் அட்லீ பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் இப்படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கவுள்ளதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. அதுவும் வில்லியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. விரைவில் இது உறுதியா என்பது குறித்து படக்குழு அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐஸ்வர்யா லெட்சுமி கடைசியாக ‘கட்டா குஸ்தி 2’ படத்தில் நடித்திருந்தார். இப்போது கைவசம் ‘சம்பராலா எட்டி காட்டு’(தெலுங்கு) மற்றும் ‘ஆஷா’(மலையாளம்) போன்ற படங்களை வைத்துள்ளார்.

Nakkheeran15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
பெரிய பட்ஜெட் படம்; வில்லியாக களமிறங்கும் ஐஸ்வர்யா லெட்சுமி!
PulseNews சுருக்கம்

இயக்குநர் அட்லீ இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘ராக்கா’. அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். சயின்ஸ் பிக்சன் மற்றும் ஃபேண்டஸி பாணியில் இப்படம் தயாராகிறது.

இப்படத்தில் தீபிகா படுகோன் கதாநாயகியாக நடிக்க, மிருணாள் தாக்கூர், ஜான்வி கபூர் மற்றும் ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதில் ஐஸ்வர்யா லெட்சுமி வில்லி கதாபாத்திரத்தில் நடிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema