PulseNews
சினிமா

காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம்; தமிழக வீரரை நேரில் அழைத்து பாராட்டிய நடிகை சிம்ரன்

சமீபத்தில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக பளுதூக்கும் வீரர் ராஜா முத்துப்பாண்டியை நடிகை சிம்ரன் நேரில் சந்தித்து பாராட்டியுள்ளார். காமன்வெல்த் போட்டிகள் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் சமீபத்திய நடைபெற்றன. மிகவும் மதிப்புமிக்க இந்த சர்வதேசப் போட்டியில் 65 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்றபங்கேற்று ஸ்னாட்ச் பிரிவில் 126 கிலோவும், கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 160 கிலோவும் எடையைத் தூக்கி ராஜா முத்துப்பாண்டி சாதனை படைத்தார். இவரின் முயற்சியை பாராட்டும் வகையில் நடிகை சிம்ரன் நேரில் அழைத்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “இந்த வெற்றியின் மூலம் நீங்கள் ஏற்கனவே இந்தியாவுக்கும் நமது தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளீர்கள். அதிலும், நமது சொந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் சர்வதேச அரங்கில் இத்தகைய சிறப்பான சாதனையைப் படைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது. இதே உறுதியுடனும் விடாமுயற்சியுடனும் தொடர்ந்து பல வெற்றிகளைப் பெற வேண்டும். தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் மேலும் பல பதக்கங்களை வென்று சாதிக்க எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். ராஜா முத்துப்பாண்டி, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர். இவர் கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் இந்திய அணியின் சார்பில் பங்கேற்றார். ஏற்கனவே அகமதாபாத்தில் நடைபெற்ற 2025 காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில், ராஜா 65 கிலோ எடைப் பிரிவில் 296 கிலோ (653 பவுண்ட்) எடையைத் தூக்கி தனது தனிப்பட்ட சிறந்த சாதனையைப் படைத்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார் . தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகனான ராஜா முத்துபாண்டி, கடுமையான நிதி நெருக்கடிகளையும் குடும்ப சூழலையும் கடந்து இந்த நிலையை அடைந்துள்ளார். 2019-ஆம் ஆண்டு ஏற்பட்ட தீவிர முழங்கை காயம் மற்றும் அடுத்தடுத்த உடல்நலப் பின்னடைவுகளைத் தொடர்ந்து விளையாட்டிலிருந்து விலக நினைத்த இவர், முறையான பயிற்சி மற்றும் விடாமுயற்சியால் மீண்டும் களம் திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

The Indian Express13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம்; தமிழக வீரரை நேரில் அழைத்து பாராட்டிய நடிகை சிம்ரன்
PulseNews சுருக்கம்

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்ற காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில், 65 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற தமிழக வீரர் ராஜா முத்துப்பாண்டி வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். அவர் ஸ்னாட்ச் பிரிவில் 126 கிலோ மற்றும் கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 160 கிலோ எடையைத் தூக்கி இந்த வெற்றியைப் பெற்றுள்ளார்.

சர்வதேச அளவிலான இப்போட்டியில் சிறந்து விளங்கிய ராஜா முத்துப்பாண்டியின் சாதனையைப் பாராட்டும் விதமாக, நடிகை சிம்ரன் அவரை நேரில் சந்தித்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema