PulseNews
சினிமா

ரஜினி சார் GenZ வைபில் இருக்கிறார்...அக்டோபர் மாதம் ஷூட் ஓவர்...தர்மன் பட அப்டேட் கொடுத்த அஸ்வத் மாரிமுத்து

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் ‘தர்மன்’ திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்படம் ரஜினிகாந்தின் 173வது படமாகும். கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் கமல்ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகின்றனர்.

‘தர்மன்’ படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வை கடந்த ஜூன் 24ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஜூன் 25ஆம் தேதி படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இப்படத்தில் ரஜினி ஒரு மருத்துவராக நடிப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. தற்போது தர்மன் படத்தின் ரஜினிகாந்த் உடன் பணியாற்றிய அனுபவம் பற்றியும் படப்பிடிப்பு குறித்த அப்டேட் கொடுத்துள்ளார் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து

அக்டோபர் மாதம் படப்பிடிப்பு நிறைவு

படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பில் ரஜினிகாந்தின் அறிமுக பாடல் மற்றும் முக்கியமான ஆக்‌ஷன் காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டன. தொடர்ந்து ஆகஸ்ட் மாதத்தில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பும் தொடங்கியது. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அஸ்வத் மாரிமுத்து  அக்டோபர் மாதத்திற்குள் படத்தின் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும், இதுவரை இரண்டு ஷெட்யூல்கள் நிறைவடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

GenZ வைபில் ரஜினி

ரஜினியுடன் பணியாற்றிய அனுபவம் பற்றி கூறுகையில் "ரஜினிகாந்த் தற்போது Gen Z ரசிகர்களையும் கவரும் வகையில் மிகவும் உற்சாகமான தோற்றத்திலும் மனநிலையிலும் இருக்கிறார். மேலும், ‘தர்மன்’ திரைப்படம் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும் வகையில் ஜாலியான படமாக உருவாகி வருகிறது" என்று கூறியுள்ளார்

தனது முந்தைய படங்களான ‘ஓ மை கடவுளே’ மற்றும் ‘டிராகன்’ ஆகியவற்றில் அசோக் செல்வன், பிரதீப் ரங்கநாதன் போன்ற இளம் நடிகர்களுடன் பணியாற்றியதாக குறிப்பிட்ட அஷ்வத், ரஜினிகாந்த் குறித்து தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

“என்னுடைய முந்தைய ஹீரோக்கள் அசோக் மற்றும் பிரதீப் ஆகியோர் இளைஞர்கள், அவர்கள் என்னுடைய நண்பர்கள். ஆனால், ரஜினி சாரைப் போல் இனிமையான ஒரு மனிதரை நான் பார்த்ததே இல்லை. நெல்சன் சொன்னது போலவே, அவர் ஒரு அற்புதமான மனிதர்.  என்னைப் பார்க்கும்போதெல்லாம் ரஜினிகாந்த் எழுந்து நிற்பார்  இதற்கான காரணத்தை ஒருமுறை ரஜினியிடம் கேட்டபோது, 'இது கலைக்கும் இயக்குநருக்கும் நான் கொடுக்கும் மரியாதை' என்று ரஜினிகாந்த் கூறியதாக அஸ்வத் மாரித்து கூறியுள்ளார்

‘தர்மன்’ படத்தில் ரஜினிகாந்துடன் சிம்ரன், ராஷி கண்ணா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்க, நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்கிறார். அனலரிவ் ஆக்‌ஷன் காட்சிகளை கவனிக்கிறார்.

Abp News13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
ரஜினி சார் GenZ வைபில் இருக்கிறார்...அக்டோபர் மாதம் ஷூட் ஓவர்...தர்மன் பட அப்டேட் கொடுத்த அஸ்வத் மாரிமுத்து
PulseNews சுருக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் ‘தர்மன்’ திரைப்படத்தின் மீதான ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது ரஜினிகாந்தின் 173-வது திரைப்படமாகும்.

இந்தத் திரைப்படம் கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் தயாராகிறது. இதில் ரஜினிகாந்த் ஜென்-ஜி (GenZ) பாணியில் இருப்பதாகத் தெரிவித்துள்ள இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதத்திற்குள் நிறைவடையும் என்ற முக்கியத் தகவலைப் பகிர்ந்துள்ளார்.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema