PulseNews
சினிமா

சிறை பட நடிகை 3-வது படம், 'மொத ரத்திரி' திருமண பத்திரிக்கை வெளியிட்ட படக்குழு; கவனம் ஈர்த்த டிரெய்லர் அப்டேட்

சிறை மற்றும் யூத் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்த நடிகை அனிஷ்மா அனில்குமார் தற்போது தனது 3-வது தமிழ் படமாக மொத ரத்திரி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவுக்கான அழைப்பிதழ் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விக்ரம் பிரபு நடித்த ‘சிறை’ மற்றும் கென் கருணாஸ் நடித்த ‘யூத்’ ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகை அனிஷ்மா அனில்குமார், தற்போது தனது 3-வது தமிழ் படத்தின் வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறார். ‘மோத ராத்திரி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ராஜா கருப்பசாமி எழுதி இயக்கியுள்ளார். இதில் ரிஷிகாந்த் கதாநாயகனாக நடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் இப்படத்தை தயாரித்துள்ளனர். ஆகஸ்ட் 21-ம் தேதி இப்படம் வெளியாக உள்ள நிலையில், படக்குழுவினர் கடந்த வாரம் அனிஷ்மா அனில்குமாரின் கேரக்டரை அறிமுகப்படுத்தும் புதிய போஸ்டரை வெளியிட்டனர். இதில் அவரது கேரக்டரின் பெயர் முத்துசெல்வி என குறிப்பிடப்பட்டுள்ளது. போஸ்டரை வெளியிட்ட மைத்ரி மூவி மேக்கர்ஸ், “மோத ராத்திரி படத்தில் ‘அடக்கமான, அமைதியான மணப்பொண்ணாக’ வரும் முத்துசெல்வியை சந்தியுங்கள்” என பதிவிட்டிருந்தது. மென்மையான மற்றும் அழகான மணப்பெண்ணாக அவரது கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். கிராமப்புற பின்னணியில் உருவாகியுள்ள நகைச்சுவை கலந்த குடும்பப் படமாக ‘மோத ராத்திரி’ உருவாகியுள்ளது. வித்தியாசமான முறையில் நடைபெறும் ஒரு திருமணத்துக்குப் பிறகு நடக்கும் சம்பவங்களே இப்படத்தின் கதைக்களமாக அமைந்துள்ளன. வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை தொடங்கும் தம்பதியினருக்கு, எதிர்பாராத குழப்பங்கள் ஏற்படுகின்றன. இதனால் அவர்களது முதல் இரவு, வாழ்க்கையையே மாற்றும் மிகப்பெரிய நிகழ்வாக மாறுகிறது. இப்படத்தில் சேத்தன், ஏ. வெங்கடேஷ், பகவதி பெருமாள், அப்துல் லீ, ஷெல்லி கிஷோர், சங்கீதா பாலன், பானுப்ரியா, சுமித்ரா தேவி எல்., வர்ஷினி கார்மேகம், கார்த்திகேயன், வேலன் மற்றும் கௌஷிக் கபிலன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தற்போது இந்த படத்தின் டீசர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. திருமண பத்திரிக்கை வடிவில் அச்சடிக்கப்பட்டுள்ள டிரெய்லர் வெளியீட்டு விழா அழைப்பிதழ் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் டிரெய்லர் வெளியீட்டு விழா, மணமகன் ரிஷிகாந்த், மணமகள் அனிஷ்மா அனில்குமார் என்று அச்சிடப்பட்டுள்ளது. தற்போது இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது.

The Indian Express15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
சிறை பட நடிகை 3-வது படம், 'மொத ரத்திரி' திருமண பத்திரிக்கை வெளியிட்ட படக்குழு; கவனம் ஈர்த்த டிரெய்லர் அப்டேட்
PulseNews சுருக்கம்

சிறை மற்றும் யூத் ஆகிய திரைப்படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமான நடிகை அனிஷ்மா அனில்குமார், தனது மூன்றாவது தமிழ் படமாக 'மோத ரத்திரி' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்தத் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவிற்கான அழைப்பிதழ் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விக்ரம் பிரபு மற்றும் கென் கருணாஸ் படங்களைத் தொடர்ந்து, அனிஷ்மா அனில்குமார் நடிக்கும் இந்த புதிய படத்தின் அப்டேட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema