இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா

நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனது காதல் வாழ்க்கை மற்றும் அதிலிருந்து தான் எதிர்கொண்ட வலி குறித்து சமீபத்திய பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளார். துருவ் விக்ரமை அனுபமா காதலித்து வந்தது சினிமா வட்டாரங்களில் பரவலாக அறியப்பட்ட நிலையில், அந்த உறவு குறித்து இருவரும் அதிகாரப்பூர்வமாக வெளிப்படையாக பேசியதில்லை. இந்நிலையில், சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் காதல் தோல்வி மற்றும் அதிலிருந்து மீண்டு வந்தது குறித்து அனுபமா பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவைச் சுற்றி பல்வேறு கருத்துகள் எழுந்த நிலையில், அந்தப் பதிவின் பின்னணியில் இருந்த இரண்டு ஆண்டுகால அனுபவத்தை அனுபமா தற்போது விரிவாகப் பகிர்ந்துள்ளார்.

இரண்டு ஆண்டு வலி

தனது இன்ஸ்டாகிராம் பதிவு குறித்து பேசுகையில் “அந்தப் பதிவு ஒரே இரவில் வந்துவிடவில்லை. அந்த ஒரு பதிவுக்குப் பின்னால் இரண்டு ஆண்டுகளின் வலி, உடல் ரீதியான மற்றும் உணர்வு ரீதியான அழிவு இருக்கிறது. நான் சும்மா ஒரு புகைப்படத்தைப் போட்டு, ஏதோ ஒரு கேப்ஷன் எழுத வேண்டும் என்று நினைக்கவில்லை.

சில காலம் சமூக வலைத்தளங்களில் இருந்து விலகியிருந்தேன். நான் உண்மையாகவே குணமடைந்த பிறகு, நான் தயாராக இருக்கும்போது மட்டுமே ஏதாவது பதிவிட வேண்டும் என்று நினைத்தேன். என்னுடைய வாழ்க்கையில் மிகவும் பெரிய விஷயத்தை நான் அடையாளம் கண்டுகொண்டேன். அதிலிருந்து குணமடைய எனக்கான நேரத்தை எடுத்துக்கொண்டேன். அதன் பிறகுதான் அதைப் பற்றி பேச வந்தேன்” என அனுபமா தெரிவித்துள்ளார்.

“நார்சிசிஸ்டிக் அப்யூஸை எதிர்கொண்டேன்”

தனது அனுபவத்தைப் பற்றி பேசிய அனுபமா, “நான் இரண்டு ஆண்டுகளாக நார்சிசிஸ்டிக் அப்யூஸை எதிர்கொண்டேன். இதைப் பற்றி முன்பு கேட்டபோது எனக்கு ஏற்பட்ட எதிர்வினை மிகவும் உடல்ரீதியாக இருந்தது. நான் நடுங்க ஆரம்பித்தேன்.

நார்சிசிஸ்டிக் அப்யூஸை எதிர்கொண்டவர்கள், டிராமா பாண்டிங் என்றால் என்ன என்பதை அறிந்தவர்கள், அந்த வலியை புரிந்துகொள்வார்கள். ஆனால் இதைப் பற்றி எதுவும் தெரியாதவர்களும் இருக்கிறார்கள். நார்சிசிஸத்திற்கு பாலினம் கிடையாது. இதை புரிந்துகொள்ளாமல் பலர் எதிர்மறையான கருத்துகளை தெரிவிக்கிறார்கள்” என்றார்.

“ஆரம்பத்தில் அது காதலாகத்தான் தெரியும்”

உறவின் ஆரம்பகட்டத்தைப் பற்றி விளக்கிய அனுபமா, “நார்சிசிஸ்டிக் அப்யூஸில் ஆரம்பம் மிகவும் வித்தியாசமாக இருக்கும். அவர்கள் மிகவும் சிறப்பாக நடிப்பார்கள். வீட்டை விட்டு வெளியே வரும்போது அவர்கள் மிகவும் வசீகரமானவர்களாகவும், அன்பானவர்களாகவும், அமைதியானவர்களாகவும் இருப்பார்கள்.

ஆரம்பத்தில் அவர்கள் உங்களுடைய ஒரு குறிப்பிட்ட முகத்தை தான் உங்களிடம் காட்டுவார்கள். உங்கள் பலவீனங்களை கண்டுபிடிப்பார்கள். உங்கள் மனநிலையை கவனிப்பார்கள். உங்கள் கடந்தகால காயங்களைப் பற்றி பேசுவார்கள். அவர்களுடைய காயங்களையும் பகிர்ந்துகொள்வார்கள். அதனால் ஒரு ஆழமான தொடர்பு இருப்பதாக நமக்குத் தோன்றும். அது மிகவும் சரியான காதல் போல இருக்கும். அதுதான் லவ் பாம்பிங் கட்டம்” எனக் கூறினார்.

“கொஞ்சம் கொஞ்சமாக கட்டுப்பாடு தொடங்கும்”

“நீங்கள் தினமும் ஜீன்ஸ், டாப் அணிபவர் என்று வைத்துக்கொள்ளுங்கள். ஒருநாள் சுடிதார் அணிந்து வருகிறீர்கள். அப்போது, ‘பேபி, இதில் நீ மிகவும் அழகாக இருக்கிறாய். இது உன்னை மனைவியாக பார்க்கும் அளவுக்கு அழகாக இருக்கிறது’ என்று சொல்வார்கள்.

நீங்களும், ‘அவருக்கு இது மிகவும் பிடித்திருக்கிறது, இன்னொரு சுடிதார் வாங்கலாம்’ என்று நினைப்பீர்கள். அப்படியே ஒன்று இரண்டாகி, இரண்டு மூன்றாகி, கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் உடை முதல் நீங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பது வரை அவர்களுடைய விருப்பமாக மாறிவிடும்.

அதன்பிறகு, நீங்கள் எந்த உடையை அணியப் போகிறீர்கள் என்று முன்கூட்டியே புகைப்படம் அனுப்பி அனுமதி கேட்கும் நிலைக்கு வருவீர்கள். சமூக வலைத்தளங்களில் என்ன புகைப்படம் பதிவிட வேண்டும் என்பதிலும் கட்டுப்பாடு வரும். நீங்கள் பதிவிட்ட புகைப்படத்தைப் பார்த்து, ‘இந்தப் புகைப்படம் சரியாக இருக்கிறதா?’ என்று கேட்பார்கள். அடுத்த முறை நீங்கள் பதிவிடுவதற்கு முன்பே அவர்களிடம் அனுமதி வாங்குவீர்கள்” என்று அனுபமா கூறியுள்ளார்.

“சிறிய சிறிய தண்டனைகள் மூலம் கட்டுப்படுத்துவார்கள்”

அவர் மேலும் கூறும்போது, “நீங்கள் ஒருவரிடம் ஒரு கருத்து சொன்னால், அதற்காக சிறிய சிறிய தண்டனைகள் கிடைக்கும். அதனால் ஒரு பிரச்சினை வரக்கூடாது என்பதற்காக, சில விஷயங்களைத் தவிர்க்க ஆரம்பிப்பீர்கள். இந்தப் பேச்சை தவிர்க்கலாம், அந்த விஷயத்தை பேசாமல் இருக்கலாம் என்று நினைப்பீர்கள். அது withdrawal, silent treatment போன்ற விஷயங்களாக மாறும். அதற்குள் நீங்கள் அந்த நபருடன் மிகவும் ஆழமாக இணைந்திருப்பீர்கள்” என்றார்.

நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனது காதல் வாழ்க்கை மற்றும் அதனால் தான் சந்தித்த வலிகள் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார். துருவ் விக்ரமுடன் அவர் காதலில் இருந்ததாக சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டாலும், அது குறித்து இருவரும் அதிகாரப்பூர்வமாக இதுவரை அறிவித்ததில்லை.
இந்த உறவு முடிவுக்கு வந்த பிறகு, கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல் நடுக்கம் உள்ளிட்ட கடுமையான மன உளைச்சல்களைத் தான் அனுபவித்ததாக அனுபமா கூறியுள்ளார். காதல் தோல்வியிலிருந்து மீண்டு வந்த அனுபவம் குறித்து அவர் இன்ஸ்டாகிராம் வாயிலாகவும் தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.