PulseNews
சினிமா

மொபைல் போன் பார்த்ததால் வந்த விணை, அறுவை சிகிச்சைக்காக ரூ3 லட்சம் செலவு செய்த ஷகீலா: அப்படி என்னதான் பிரச்னை?

நடிகை ஷகீலா சமீபத்தில் தீவிர உடல்நலப் பிரச்சினைகள் காரணாக கழுத்தில் அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அதிக நேரம் மொபைல் போன் பயன்படுத்தியதே இந்தப் பிரச்சினைக்கு காரணமாக இருந்ததாகத் தெரிகிறது. இந்தத் தகவலை நடிகையே சமூக வலைதளங்கள் மூலம் தனது ரசிகர்களிடம் பகிர்ந்துகொண்டார். மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பிறகு, தனது யூடியூப் சேனலில் வெளியிட்ட வீடியோவில் தனது உடல்நிலை மற்றும் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை ஷகீலா விரிவாகப் பகிர்ந்துள்ளார். இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்: அறுவை சிகிச்சைக்குப் பிறகு கழுத்தில் காலர் அணியுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அந்த வீடியோவில் ஷகீலா கழுத்துக் காலர் அணிந்திருந்த காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. மேலும், மருத்துவமனையில் அவர் இருந்த சில காட்சிகளுடன், வீடு திரும்பிய பிறகு எடுக்கப்பட்ட காட்சிகளும் வீடியோவில் இடம்பெற்றிருந்தன. தனது உடல்நலப் பிரச்சினைக்கு காரணம் குறித்து பேசிய ஷகீலா, படுக்கையில் ஒருபுறமாகச் சாய்ந்து பல மணி நேரம் மொபைல் போனில் கேம்ஸ் விளையாடியதால், கழுத்தில் உள்ள முக்கிய ரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டதாகவும், அதன் விளைவாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் கூறினார். இந்த அறுவை சிகிச்சைக்காக ரூ.3 லட்சம் செலவானதாகவும் அவர் தெரிவித்தார். மொபைல் போனை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்த வேண்டாம் என்று மக்களுக்கு அறிவுறுத்திய அவர், குறிப்பாக குழந்தைகளுக்கு செல்போன் மற்றும் பிற கேஜெட்களை அதிகமாகக் கொடுக்க வேண்டாம் என்றும் பெற்றோர்களைக் கேட்டுக்கொண்டார். இந்த வீடியோவில் தனது நிலைமை குறித்து பேசியதுடன், தன்னைப் பற்றியே நகைச்சுவையாகவும் ஷகீலா பேசியுள்ளார். தற்போது படுக்கையில் இருந்து எழுவது, சாப்பிடுவது போன்ற அடிப்படை விஷயங்களுக்குக்கூட மற்றவர்களின் உதவி தேவைப்படுவதாக அவர் கூறினார். சமீபத்தில் எனக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. அது மிகப்பெரிய அறுவை சிகிச்சை. மிகவும் முக்கியமான ஒரு விஷயத்தை உங்களிடம் சொல்ல விரும்புகிறேன். செல்போன் மிகவும் பயனுள்ள ஒரு பொருள்தான். ஆனால், தேவைக்கு அதிகமாக அதை பயன்படுத்தாதீர்கள். “நான் படுக்கையில் ஒருபுறமாகச் சாய்ந்து கொண்டு, தொடர்ந்து 4 மணி நேரம் வரை செல்போனில் கேம்ஸ் விளையாடுவேன். டீ அல்லது காபி குடிப்பதற்காக மட்டுமே எழுந்து செல்வேன். டீ குடித்துவிட்டு மீண்டும் வந்து அதே கேமை விளையாடத் தொடங்கிவிடுவேன். அதன் பிறகு யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் பல மணி நேரம் ரீல்ஸ்களையும் பார்த்துக்கொண்டிருப்பேன். தவறான உடல் நிலையில் நீண்ட நேரம் மொபைல் போனைப் பயன்படுத்தியதும், அளவுக்கு அதிகமாக போனை உபயோகித்ததும் கழுத்தில் உள்ள முக்கிய ரத்த நாளங்களைப் பாதித்ததாகவும், இறுதியில் அறுவை சிகிச்சை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு மொபைல் போன்களை வழங்குவது குறித்தும் ஷகீலா எச்சரிக்கை விடுத்துள்ளார். செல்போனை அத்தியாவசியமான விஷயங்களுக்கு மட்டுமே பயன்படுத்துங்கள். தேவையில்லாத வீடியோக்களைப் பார்ப்பதைத் தவிருங்கள். என்னுடைய வீடியோக்களாக இருந்தாலும் தேவையில்லாதவற்றைப் பார்க்க வேண்டாம். பயனுள்ள வீடியோக்களை மட்டுமே பாருங்கள். இல்லையென்றால் ரூ.3 லட்சத்தை இழப்பதுடன், தாங்க முடியாத வலியையும் அனுபவிக்க வேண்டியிருக்கும்” என்று அவர் எச்சரித்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம் மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழித் திரைப்படங்களிலும் ஷகீலா நடித்துள்ளார். மோகன்லால் நடித்த ‘சோட்டா மும்பை’ (2007) திரைப்படத்திலும், பிருத்விராஜ் சுகுமாரன் நடித்த ‘தேஜா பாய் & ஃபேமிலி’ (2011) படத்திலும் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தமிழில், ‘ஜெயம்’, ‘மோனலிசா’, ‘பங்காரம்’, ‘அழகிய தமிழ் மகன்’, ‘சிவா மனசுல சக்தி’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’, ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’, ‘மத கஜ ராஜா’ உள்ளிட்ட திரைப்படங்களிலும் ஷகீலா நடித்துள்ளார்.

The Indian Express13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
மொபைல் போன் பார்த்ததால் வந்த விணை, அறுவை சிகிச்சைக்காக ரூ3 லட்சம் செலவு செய்த ஷகீலா: அப்படி என்னதான் பிரச்னை?
PulseNews சுருக்கம்

நடிகை ஷகீலா சமீபத்தில் உடல்நலக் குறைவு காரணமாக கழுத்தில் அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார். இதற்காக அவர் ரூ.3 லட்சம் செலவு செய்துள்ளார்.

அதிக நேரம் மொபைல் போன் பயன்படுத்தியதே இந்தப் பாதிப்பிற்குக் காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த அனுபவங்களை அவர் தனது யூடியூப் சேனல் வாயிலாக ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார்.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema