PulseNews
சினிமா

விஜய் பிரதமர்! போலி பிரச்சாரம் வடக்கேயும் ஆரம்பிச்சுட்டாங்க!

நா ளுக்கு ஒரு அவதாரம் எடுப்பதில் விஜய் கில்லாடி. ஆனால், அனைத்தும் போலி அவதாரங்களாகவே இருக்கிறது. அரிதாரம் பூசுவதிலும் பல வேஷம் கட்டுவதிலும் ஜெகஜால கில்லாடியான விஜய் லேட்டஸ்ட் ஆக எடுத்திருக்கும் அவதாரம் பிரதமர் அவதாரம். சமீபத்தில் இவர் துவக்கி வைத்த வட இந்தியப் பத்திரிகை விஜய்யை ‘பிரதமர்’ என்று புகழ்ந்து கட்டுரை எழுதியுள்ளது.தமிழகத்திலிருந்து வெளிவரும் பாரம்பரியம் மிக்க ஆங்கில நாளிதழ் உரிமையாளர் ஒருவர், "விஜய் இளைஞர்களின் எழுச்சி நாயகன். அவர் அகில இந்திய அளவில் கவனத்தை ஈர்க்கிறார்'’என ட்விட்டர் பதிவு போட்டிருக்கிறார். இதெல்லாம் கூடப் பரவாயில்லை. இந்தியா முழுவதும் விஜய்யின் புகழ் பாடும் இந்தி வீடியோக்கள் கணக்கில்லாமல் வெளிவந்துகொண்டே இருக்கின்றன. சமூக வலைத்தளங்களில் பிரபல ஊடகவியலாளரான ஷர்மிளா பாலாஜி பதிவு ஒன்றைப் போட்டிருக்கிறார். அதில் ஒரு இளைஞர் வட இந்தியாவில் விஜய் பற்றிப் பரவும் வீடியோக்களைப் பற்றி குறிப்பிடுகிறார். அதில் ஒரு வீடியோ வை மட்டும் பத்து மில்லியன் பேர் வரை பார்த்திருக்கிறார்கள். அதில் "விஜய் ஆட்சியில் தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக குற்றம் செய்பவர்களுக்கு உடனடியாக மரண தண்டனை விதிக்கப்படுகிறது. அப்படிப்பட்ட குற்றம் செய்பவர்கள் சுட்டு வீழ்த்தப்படுகிறார்கள்'’என குறிப்பிடப்படுகிறது. அந்த வீடியோவில் பேசிய பெண்ணிடம் ஒரு இளைஞர், "இதுபோல் இன்னொரு வீடியோ செய்ய முடியுமா?'’என கேட்கிறார். “"நான் விஜய்யைப் பாராட்டி இதுவரை பத்து வீடியோ போட்டிருக்கிறேன். ஒரு வீடியோவுக்கு அறுபதாயிரம் ரூபாய் என ஆறு இலட்சம் ரூபாய் தந்திருக்கிறார்கள். மில்லியன் கணக்கில் எனது வீடியோவைப் பார்க்கிறார்கள்'’என அந்தப்பெண் சுயதம்பட்டம் அடிக்கிறார். அந்த உரையாடலை ஷர்மிளா பகிர்ந்துள்ளார். இதுபோல இந்தியில் விஜய் புகழ் பாடும் வீடியோக்கள் நூற்றுக்கணக்கில் இருக்கின்றன. அவற்றை மில்லியன் கணக்கில் வட இந்தியர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தியா, வங்காள தேசம், பாகிஸ்தான், நேபாளம் என விஜய் புகழ்பாடும் வீடியோக்கள் பரவிக் கொண்டுள்ளன. இதையெல்லாம் ஒருங்கிணைப்பது, பணம் தருவது விஜய்யின் அந்தரங்க உதவியாளர் ஜெகதீஷ் பழனிச்சாமிதான். ‘ரூட்’ இணையதளம் மூலம் செய்யப்படும் இந்த பிரச்சாரத்தின் எதிரொலி யாகத்தான் சட்டமன்றத்தில் ஆதவ் அர்ஜுனா "தென்னிந்தியாவைச் சேர்ந்த ஒருவர் ஏன் பிரதமர் ஆகக்கூடாது... அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக வும் இருக்கலாம்'” என விஜய்யை வைத்துக் கொண்டே பேசினார். விஜய்யின் இந்த பிரச்சார உத்திகள் ராகுல் காந்தியின் நண்பர் விஜய் என்பதால் காங்கிரசுக்கு உதவியாக அமைந்துவிடப் போகிறது என பா.ஜ.க. கவலைப்படும் அளவிற்கு நடந்து கொண்டிருக்கிறது. “இப்படி ஒரு பிரச்சாரம் நடப்பது இப்பொழுதுதான் தமிழகத்திற்கு தெரிய வருகிறது. ‘ரூட்’ ஜெகதீஷ் பழனிச்சாமியின் பயனாளர்கள் லிஸ்ட்டில் கணிசமான எண்ணிக்கையில் வட இந்தியர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கெல் லாம் பணம் கொடுத்து சமூக வலைத்தளங்களில் விஜய் பற்றிய பதிவுகளை பார்ப்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது ‘ரூட்’டின் ஸ்டைல். ஒரு விசயத்தை ஜெகதீஷும் விஜய்யும் நினைத்தால் சமூக வலை தளங்களில் அதை ‘ட்ரெண்ட்’ ஆக்கிவிடுவார்கள். விஜய்யை ஆதரித்துப் பேசுபவர் களுக்கு இலட்சக்கணக்கில் பார்வையாளர்களும் பின்பற்று பவர்களும் வருவதன் ரகசியம் ஜெகதீஷ் பழனிச்சாமியின் ‘ரூட்’ நெட் ஒர்க்தான். இவர்கள் நினைத் தால் யாரையும் ஹீரோ ஆக்கு வார்கள். இவர்களை எதிர்த்தால் அதே நபர்களை ஜீரோ ஆக்கு வார்கள். விஜய்யின் இந்த நெட் ஒர்க்குக்கு போட்டியாக ‘தல’ அஜித்தும், சூப்பர் ஸ்டார் ரஜினியும் தங்களது சமூக வலைத்தள நெட் ஒர்க்கை பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். சினிமா பீல்டில் அனைத்து நடிகை களும் ஜெகதீஸ் பழனிச் சாமியின் கண்ட்ரோலில் இருப்பதற்கு காரணம் ‘ரூட்’ அமைப்பின் சமூக வலைத்தள நெட் ஒர்க்தான்’என்கிறார்கள் இந்த வலைப் பின்னலை நன்கு அறிந்தவர்கள். “விஜய் டெல்லிக்குச் சென்றபோது அவரை சந்திக்க மறுத்தவர் உள்துறை அமைச்சர் அமித்ஷா. அவர் தென் மண்டல முதல்வர்கள் மாநாடு என்ற பேரில் மகாபலிபுரத்துக்கு வந்து விஜய்யை சந்திக்கிறார். வருகின்ற பாராளுமன்றத் தேர்தலுக்கு தயாராகும் விஜய் அதற்காக கூட்டணிக் கட்சிகளைத் தயார் செய்துகொண்டு வருகிறார். கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட இன்று விஜய்யை எதிர்க்கத் தயாராக இல்லை. சினிமா உலகம் தமிழ் தேசிய மாநாட்டை நடத்தி அதன் தீர்மானத்தை விஜய்யிடம் கொடுக்கிறார்கள். கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை காங்கிரஸ் கட்சிக்காக விஜய் கண்டுகொள்ளாமல் விட்டார். இப்படியாக கூட்டணிக் கட்சிகளை தயார் செய்யும் விஜய், ‘தி.மு.க., அ.தி.மு.க. இல்லாமல் பா.ஜ.க.வுடன் கூட்டணிக் கட்சியாக நமது த.வெ.க.தான் இருக்கும். பாராளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளையும் நாம் ஜெயிப்போம். என்னை ஆதரியுங்கள் என கூறியுள்ளார். ஒரு பக்கம் காங்கிரஸ், இன்னொரு பக்கம் பா.ஜ.க. என தந்திரமாக தேர்தல் கூட்டணி ‘டீல்’ பேசி வருகிறார். அது மட்டுமன்றி விஜய்தான் பிரதமர் வேட்பாளர் என்பதற்கு வலு சேர்க்கத்தான் திரிஷாவை பாராளுமன்றம் அனுப்பி வைக்க முயற்சிக்கிறார்” என்கிறார்கள் த.வெ.க.வைச் சேர்ந்தவர்கள்.

Nakkheeran13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
விஜய் பிரதமர்! போலி பிரச்சாரம் வடக்கேயும் ஆரம்பிச்சுட்டாங்க!
PulseNews சுருக்கம்

விஜய்யை பிரதமராக முன்னிறுத்தி வட இந்திய ஊடகங்களில் தவறான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அண்மையில் தொடங்கப்பட்ட வட இந்திய பத்திரிகை ஒன்றில் விஜய்யை 'பிரதமர்' என்று குறிப்பிட்டு புகழாரம் சூட்டப்பட்டுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த பாரம்பரியமிக்க ஆங்கில நாளிதழ் உரிமையாளர் ஒருவர், விஜய் இளைஞர்களின் எழுச்சி நாயகராகவும் அகில இந்திய அளவில் கவனத்தை ஈர்ப்பவராகவும் இருப்பதாக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். பல்வேறு வேடங்களை ஏற்று நடிப்பதில் வல்லவரான விஜய், தற்போது இத்தகைய போலி பிம்பங்களை உருவாக்கி வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema