PulseNews
சினிமா

திராவிட அரசியலில் எம்.ஜி.ஆர். எழுச்சி! டைரக்டர் -ரைட்டர் -வி.சி.குகநாதன் (22)

(22) "மிஸ்டர் எம்.ஜி.ஆர்.'' -ஜெயலலிதாவின் கோபம்! தெ ன்காசி பரதன் தியேட்டரில் நானும் நண்பர் களும் எம்.ஜி.ஆர். படம் ஒன்றினைப் பார்த்துக்கொண் டிருக்கும்போது முன்வரிசையில் படம் பார்த்துக்கொண்டி ருந்த சில இளைஞர்கள் கிண்டலும், கேலியும் பேசி பெருசா சிரிச்சு அட்டகாசம் செய்துகொண்டிருந்தனர். ஒரு தடவை சொல்லிப் பார்த்தேன். அவர்கள் நிறுத்தவில்லை. எம்.ஜி.ஆர். வயதைப் பற்றி வியாக்யானம் செய்தனர். பொறுத்துப் பொறுத்துப் பார்த்தேன். அவர்கள் நிறுத்தவில்லை. அதிக கிண்டலும் கேலியுமாகப் பேசிய ஒருவனது பிடரியில் என் பூட்ஸ் காலால் எட்டி உதைத்தேன். அவன் முன் இருந்த காலி நாற்காலியையும் தாண்டிப்போய் விழுந்தான். அவன் கோபமாக எழுந்தான். அவனோடு வந்தவர்களும் கோபமாகக் கத்தியபடி திரும்பி என்னைப் பார்த்தனர். அந்த வயதில் அட்டகாசமாக ஒரு மல்யுத்த வீரனைப் போல் இருந்தேன். எழுந்து நின்றேன், என் கையில் ரிவால்வர். அவ்வளவுதான் அவர்களின் கோபம் எடுபடவில்லை... வெளியே போய்விட்டார்கள். என்னோடு வந்தவர்கள் "என்ன பழக்கம் இது, இவர்கள் கிண்டலும், கேலியும் எந்த விதத்திலாவது எம்.ஜி.ஆரை பாதிக்குமா?' என்று என்னென்னமோ சமாதானப்படுத்த முயன்றனர். ஆனாலும் அவர்கள் செயலை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. இதுபோல் பல நிகழ்வுகள். எம்.ஜி. ஆரைப் பற்றி இழிவாக நான் இருக்கும் இடத் தில் யார் பேசினாலும் தட்டிக் கேட்கும் பழக் கம் பல வருடங்களாக என்னுள் இருந்தது. அந் தப் பழக்கத்தைப் போக்கியதும் எம்.ஜி.ஆர்.தான். படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தபோது... ஜெயலலிதா, நாற்காலியில் அமர்ந்து ஒரு புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்தார். நான் அவர் அமர்ந்திருந்த நாற்காலிக்கு பின்பக்கம் நின்று இன்னொரு நடிகருக்கு அவர் பேசவேண் டிய வசனங்களை சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தேன். அப்போது திடீரென ஜெயலலிதா "மிஸ்டர் எம்.ஜி.ஆர்.' என கூப்பிட்டார். நான் சற்று சத்தமாக, "இடியட்' என்று சொன்னதோடு... அவர் அமர்ந்திருந்த நாற்காலியின் பின்பக்கம், என் கையிலிருந்த வசன பேப்பர்களால் ஓங்கி தட்டிவிட்டேன். ஜெயலலிதா என்னை நோக்கி கோபமாக வந்தார். இது ஆரம்ப காலம் அவருக்கும், எனக்கும். அதனால் நான் வேகமாக விலகி வேறு பக்கமாக நகர்ந்தேன். அவர் விடவில்லை. "வாட் டிட் யு ஸே' என்று கேட்டபடி என்னைப் பார்த்தபடி வந்தார். எதுவும் நடந்துவிடக் கூடாது என்பதற்காக வெளியே போக முயன்றேன். எம்.ஜி.ஆர். என்னைக் கூப்பிட் டார். நான் வேகமாகப் போய் அவர் பின்னால் நின்றுகொண்டேன். ஜெயலலிதா அங்கேயும் வந்தார். மிகக் கடுகடுப்பாக இருந்தார். என்ன நடந்தது? என எம்.ஜி.ஆர். கேட்க, எல்லாவற்றையும் சொல்லிவிட்டார். எம்.ஜி.ஆர்., அந்தம்மாவிடம் "நீங்க உட்காருங்க, நான் கேட்கிறேன்'' எனச் சொல்லிவிட்டு என் கையைப் பிடித்து இழுத்தபடி செட்டில் ஒரு மூலைக்கு இழுத்துப் போனார். நான் முடிவு கட்டிவிட்டேன், இன்று நிச்சயமா என்னை அடிப்பார் அல்லது வெளியே அனுப்பிவிடுவார் என்று. இதுக்கா இவ்வளவு கஷ்டப்பட்டு வந்தோம் என நினைக்க, கண்கள் குளமாயின. எம்.ஜி.ஆர். "எதுக்காக அப்படிச் செய்தே... மறைக்காமல் சொல்லு'' என அமைதியாகக் கேட்டார். "அவங்க சத்தமா மிஸ்டர் எம்.ஜி. ஆர். என கூப்பிட்டது எனக்குப் பிடிக்கலே.'' "அதிலே என்ன தப்பு?'' "எல்லார் முன்னாடியும் தான் அமர்ந்திருந்த நாற்காலியை விட்டு எழும் பாமல், கால் மேல கால் போட்டபடி மிஸ்டர் எம்.ஜி.ஆர்.னு கூப்பிடலாமா? எத்தனை லட்சம் பேர் உங்களை கடவுளா நினைக்கிறாங்க'' என்றேன் கண்ணீருடன். "அவ கான்வென்ட்ல படிச்சவ...'' "அதுக்காக... நானும் கான்வென்ட்லதான் படிச்சேன்'' அவர் சிரித்தார். என் கண்ணீரைத் துடைக்கச் சொல்லி கைக்குட்டையை நீட்டினார். நான் என் கர்சிப்பை எடுத்து துடைத்துக்கொண்டேன். தன் உதவியாளரை அழைத்து ஜெயலலிதாவை அழைத்துவரச் சொன்னார். அவங்க அதே கடுகடுப்போடதான் வந்தாங்க. "இவன் இலங்கையில படிச்சவன், வளர்ந்தவன். என்மேல உள்ள பிரியத்துல அப்படி நடந்துக்கிட்டான். உங்ககூட நடிப்பு பள்ளியில் படிச்சவன் தானே? ஸாரி சொல்லிடுவான்... விட்டுட லாமா?'' என்று எம்.ஜி.ஆர். கேட்டதும், ஜெயலலிதா அமைதியாகிவிட்டார். நான் ஸாரி சொன்னேன். அவங்க கையை நீட்டினாங்க, நானும் கை கொடுத்தபடி மறுபடி ஸாரி மேடம் என்றேன். எம்.ஜி.ஆர். வாய் விட்டுச் சிரித்தார். "நோ குகன்... நீங்க எப்ப வும்போல அம்முன்னே கூப்பிடுங்க'' என்றார் ஜெயலலிதா. "ஓ... இவனும் உன்னை அம்முன்னுதான் கூப்பிடுவானா?'' என்று கேட்டார் எம்.ஜி.ஆர். "உங்களுக்காக என்ன வேணும்னாலும் செய்வாரு'' என்றார் ஜெயலலிதா. "என்னை நம்பி ஊரைவிட்டு, உறவை விட்டு வந்தவனாச்சே'' என்றார் எம்.ஜி.ஆர். இருவருமே பிற்கால முதல்வர்கள் ஆவார்கள் என்பது தெரியாமல் நான் இருவருக்கும் நன்றி சொன்னேன். என்மீது அளவற்ற பாசம் கொண்டவர் புலவர் புலமைப்பித்தன். ஓய்வு நேரம் கிடைத் தால் என் அலுவலகம் வருவார். எம்.ஜி.ஆர். மீது அளவற்ற பாசமுள்ளவர். இவரை எம்.ஜி.ஆர். மேல்சபை உறுப்பினராக்கினார். இது புலவரை மகிழச்சியின் எல்லைக்கு ஏற்றிவைத்தது. அவர் அந்தப் பதவியேற்பின்போது, எம்.ஜி.ஆரைப் பற்றி இப்படிச் சொன்னார்... "நான் கால் வைத்த இடமெல்லாம் தன் கைவைத்து என்னை உயர்த்தியவர்' -இதைக் கேட்டு நெகிழ்ந்துபோனார் எம்.ஜி.ஆர். அதேபோல் புலவர் புலமைப்பித்தன் எம்.ஜி.ஆருக்காக எழுதிய அத்தனை திரை யிசைப் பாடல்களும் சூப்பர் ஹிட் பாடல்களே. கழகத்தில் விசுவாசியாக இருந்த பலபேர் வரவேண்டிய இடத்துக்கு வராமல் போய்விட் டார்கள் என்பதை எம்.ஜி.ஆர். ஒருமுறை சொன்ன கேள்வி -பதி லில் புரிந்துகொண் டேன். "கலைஞரைத் தவிர கழகத்தில் முதல்வ ராக வர யாராவது இருக்கிறார்களா?'' எனக் கேட்டபோது, "இருந்தார்கள்... தற் போது இல்லை'' என்றார். யார் அவர்கள் என மீண்டும் கேட்கப் பட்டபோது, "ஈ.வி.கே. எஸ். சம்பத்தும், கண்ணதாசனும் தகுதியானவர்கள்'' என எம்.ஜி.ஆர். சென்னார். நான் இந்த பதில் குறித்து பலமுறை திரும் பத் திரும்ப சிந்தித்துப் பார்த்ததுண்டு. அப் போதுதான் அவர்கள் ஏன் பிரிந்துபோனார்கள் என்பதற்கான காரணங்களை பலரிடம் நான் விசாரிக்கத் தொடங்கினேன். பேரரறிஞர் அண்ணாவின் நற்பண்புக்கும், குணத்துக்கும் அவர்களைப் பிரிந்துபோக விடுபவர் அல்ல. அவரது உற்ற நண்பர் சம்பத். அப்படியென்றால் இது மூன்றாவது ஒரு நபரால் ஏற்பட்ட பிரிவினையாகத்தான் இருக்கவேண்டும் என என் உள்ளுணர்வு சொன்னது. எம்.ஜி.ஆர். உருவாக்கிய கட்சியில் இளம் தலைமுறையினர் பலர். அண்ணன் காளிமுத்து, ஆர்.எம்.வீ., பண்ருட்டி ராமச்சந்திரன், திருநா வுக்கரசு, ஜெ.சி.டி. பிரபாகர், செங்கோட்டை யன் போன்ற பலருண்டு. ஆனாலும் கட்சி ஜெயலலிதாவிடம் போனது. அவர் காலத்தி லேயே ஊழல் சிறைவாசம்... பின்னர் தேய் மானம்தான். நல்ல தலைவர்கள், அற்புதமான தொண்டர்களை உள்ளடக்கிய கட்சியாகவே கழகம் பரிமளித்தது? வளர்க்கப்பட்ட அறிவாற்றலும், கட்டுக்கோப்பும், கடமை -கண்ணியம் -கட்டுப்பாடும் ஒரு சிலரின் சுயநலத்தினால் சிதைக்கப்பட்டுவிட்டதை பார்க்கும்போது கோபம் வருவதை தடுக்க முடியவில்லை. (வரும் இதழில்...)

Nakkheeran13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
திராவிட அரசியலில் எம்.ஜி.ஆர். எழுச்சி! டைரக்டர் -ரைட்டர் -வி.சி.குகநாதன் (22)
PulseNews சுருக்கம்

திராவிட அரசியலில் எம்.ஜி.ஆரின் எழுச்சி குறித்து இயக்குனர் மற்றும் எழுத்தாளர் வி.சி.குகநாதன் தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். தென்காசி பரதன் திரையரங்கில் எம்.ஜி.ஆர் திரைப்படம் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, முன்வரிசையில் இருந்த இளைஞர்கள் சிலர் நடிகரின் வயதைக் குறித்து கேலியும் கிண்டலும் செய்து அட்டகாசம் செய்துள்ளனர்.

எத்தனை முறை எச்சரித்தும் அவர்கள் தங்களை மாற்றிக்கொள்ளவில்லை. தொடர்ச்சியாக எம்.ஜி.ஆரை விமர்சித்து அந்த இளைஞர்கள் பேசியதால் பொறுமை இழந்த குகநாதன், கடுமையாகப் பேசியவர்களில் ஒருவரைத் தாக்கியதாகத் தெரிவித்துள்ளார்.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema