நடிப்பில் பிஸி, மகள் பிறந்தபோது அவருடன் இருக்க முடியவில்லை: மகளுடன் நடந்த ரியல் சம்பவத்தை படத்தில் வைத்த சூர்யா
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா, கடந்த 2006-ம் ஆண்டு நடிகை ஜோதிகாவை திருமணம் செய்துகொண்ட நிலையில், 2007-ம் ஆண்டு இந்த தம்பதிக்கு மகள் தியா பிறந்தார். அப்போது, குடும்பத்தினர் தங்களது முதல் வீட்டிற்குள் குடியேறுவதற்கு முன்பு ஒரு சிறப்பு சடங்கை செய்தனர். குடும்பத்தினர் தாங்களே முதலில் வீட்டிற்குள் செல்லாமல், பிறந்த குழந்தையான தியாவின் பாதத்தை முதலில் வீட்டின் வாசலில் பதித்தனர். இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்: பெண் குழந்தை வீட்டிற்கு வந்தால், மகாலட்சுமியே வீட்டிற்குள் வந்ததாக கருதப்படும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இந்த அடையாள நிகழ்வு செய்யப்பட்டது. கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு, அந்த குடும்பத்தின் தனிப்பட்ட நினைவு தற்போது திரைப்படத்திலும் இடம்பெற்றுள்ளது. ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படத்தில், சூர்யா கேரக்டரின் குழந்தை சார்விக் முதல்முறையாக குடும்ப வீட்டிற்குள் நுழையும் காட்சி, தனது குடும்பத்தினர் தியா பிறந்தபோது செய்த சம்பவத்தை நேரடியாக அடிப்படையாகக் கொண்டது என்று சூர்யா தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 14-ம் தேதி திரைப்படம் வெளியாகும் நிலையில், தயாரிப்பு நிறுவனமான சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் வெளியிட்ட விளம்பர உரையாடல் நிகழ்ச்சியில், தனது சக நடிகர்களுடன் சூர்யா இந்த சம்பவத்தைப் பகிர்ந்துகொண்டார். ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படத்தில் சஞ்சய் விஸ்வநாத் என்ற கேரக்டரில் சூர்யா நடித்துள்ளார். தனது குழந்தையுடனான தந்தையின் உறவுதான் படத்தின் உணர்வுப்பூர்வமான மையமாக அமைந்துள்ளது. இந்த கேரக்டருக்காக தனது சொந்த பெற்றோர் அனுபவத்துக்கும் எவ்வாறு தொடர்பு இருக்கிறது என்று சூர்யாவிடம் கேட்கப்பட்டது. அப்போது, தனது மகள் தியாவின் குழந்தைப் பருவத்தில் தான் இருக்க வேண்டிய அளவுக்கு அருகில் இருக்கவில்லை என்று சூர்யா ஒப்புக்கொண்டார். குறிப்பாக தியா குழந்தையாக இருந்தபோது, நான் நிறைய விஷயங்களை தவறவிட்டுவிட்டேன். வேலை மற்றும் பயணம் காரணமாக முதல் சில ஆண்டுகளில் நான் மிகவும் பிஸியாக இருந்தேன்,” என்று அவர் கூறினார். 2007 முதல் 2010 வரையிலான அந்த காலகட்டம் சூர்யாவின் திரையுலக வாழ்க்கையில் மிகவும் பரபரப்பான ஆண்டுகளாக இருந்தன. ‘வாரணம் ஆயிரம்’, ‘சிங்கம்’ உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து தயாராகி வெளியாகிக் கொண்டிருந்தன. தேவ் பிறந்தபோது, நான் செய்த தவறை உணர்ந்தேன். அதன்பிறகு அவனது குழந்தைப் பருவத்தில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று முயற்சி செய்தேன். ஆனால், தியாவை முதன்முறையாக வீட்டிற்கு அழைத்து வந்தபோது நடந்த சம்பவம் மனதில் நீங்காமல் இருந்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகு அதே நினைவு ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படப்பிடிப்பில் மீண்டும் நினைவுக்கு வந்துள்ளது. பொதுவாக ஒரு பெண் குழந்தை பிறந்தால், மகாலட்சுமியே வீட்டிற்கு வந்துவிட்டதாக நாம் சொல்வோம். தியா பிறந்தபோதுதான் நான் எங்களுக்கான முதல் வீட்டை வாங்கினேன். நாங்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தோம். ஆனால், அந்த வீட்டிற்குள் நாங்கள் அனைவரும் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பு, தியாவின் பாதத்தை முதலில் அங்கு வைத்து அடையாளமாக அந்த நிகழ்வை செய்தோம்,” என்று சூர்யா கூறினார். மேலும், “‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படத்தில் குழந்தை சார்விக் தனது வீட்டிற்குள் முதன்முறையாக நுழையும் காட்சியைப் பார்த்தபோது, நாமும் இதே விஷயத்தை படத்தில் செய்யலாமே என்று நினைத்தேன்,” என்று சூர்யா தெரிவித்தார். சூர்யாவும் ஜோதிகாவும் 1999-ம் ஆண்டு ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ படப்பிடிப்பில் முதன்முதலாக சந்தித்தனர். ஆனால், 2003-ம் ஆண்டு ‘காக்க காக்க’ படத்தின் தயாரிப்பின்போதுதான் இருவரும் நெருக்கமாகப் பழகத் தொடங்கியதாக கூறப்படுகிறது. இருவரும் 2006-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி சென்னையில் நடைபெற்ற தனிப்பட்ட திருமண நிகழ்ச்சியில் திருமணம் செய்துகொண்டனர். 2007-ம் ஆண்டு இவர்களுக்கு மகள் தியா பிறந்தார். 2010-ம் ஆண்டு மகன் தேவ் பிறந்தார். சூர்யா-ஜோதிகா தம்பதி தங்களது குழந்தைகளை பெரும்பாலும் ஊடக வெளிச்சத்திலிருந்து விலக்கியே வைத்துள்ளனர். இதனால், தியாவும் தேவ்வும் கடந்த ஆண்டுகளில் ஊடகங்களில் மிகவும் அரிதாகவே காணப்பட்டுள்ளனர். வெங்கி அட்லூரி இயக்கியுள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் 2026-ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா, 2006-ம் ஆண்டு நடிகை ஜோதிகாவை திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதிக்கு 2007-ம் ஆண்டு தியா என்ற மகள் பிறந்தார். படப்பிடிப்பு பணிகளில் பிஸியாக இருந்ததால், தனது மகள் பிறந்தபோது சூர்யாவால் உடன் இருக்க முடியவில்லை.
தங்கள் முதல் வீட்டிற்குள் குடும்பத்தினர் குடியேறியபோது, ஒரு சிறப்பு சடங்கை அவர்கள் செய்துள்ளனர். தாங்கள் செல்வதற்கு முன்பாக, தங்கள் முதல் குழந்தையான தியாவின் பாதங்களை வீட்டின் வாசலில் பதிக்க வைத்து அவர்கள் வீட்டிற்குள் அழைத்துச் சென்றனர். இந்த உணர்ச்சிகரமான நிகழ்வை சூர்யா தனது படத்தில் காட்சியாக வைத்துள்ளார்.