PulseNews
சினிமா

“அதிரடி விருந்து... மிகச்சிறந்த திரையரங்க அனுபவம்...” - சிவகார்த்திகேயன் பாராட்டு!

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடித்துள்ள ‘டிசி’ படம் கடந்த 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் வாமிகா கபி நாயகியாக நடித்திருக்க சஞ்சனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இவரது இசையில் வெளியான பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றன. படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. இயக்குநர்களுக்கென தனி சிறப்பு காட்சி திரையிடப்பட்ட நிலையில் அதில் கலந்து கொண்ட கே.எஸ்.ரவிகுமார், ஆர்.கே.செல்வமணி உள்ளிட்ட பல்வேறு இயக்குநர்களும் படத்தை பாராட்டினர். தொடர்ந்து சூர்யா தனது எக்ஸ் பக்கம் மூலம் பாராட்டுத் தெரிவித்திருந்தார். இப்படி தொடர் பாராட்டால் படம் 4 நாட்களில் ரூ. 50 கோடிக்கு மேல் வசூலித்தது. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் இப்படத்தை பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “டிசி ஒரு அதிரடி விருந்து, ஒரு மிகச்சிறந்த திரையரங்க அனுபவம். லோகேஷ் கனகராஜும் அருண் மாதேஸ்வரனும் விறுவிறுப்பான தருணங்கள் நிறைந்த ஒரு வலுவான ஆக்ஷன் திரைப்படத்தை கொடுத்துள்ளனர். இவ்வளவு அற்புதமான படத்தை உருவாக்கிய ஒட்டுமொத்த குழுவிற்கும், அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் வாழ்த்துகள். என் அன்பிற்குரிய ராக்ஸ்டார், என் நண்பன் அனிருத்தை பார்த்து பெருமைப் படுகிறேன். நீ உண்மையிலேயே ஈடு இணையற்றவனாக உயர்ந்துவிட்டாய், உனக்கென ஒரு தனி சிம்மாசனத்தை உருவாக்கி, அதில் கம்பீரமாக அமர்ந்திருக்கிறாய்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Nakkheeran13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
“அதிரடி விருந்து... மிகச்சிறந்த திரையரங்க அனுபவம்...” - சிவகார்த்திகேயன் பாராட்டு!
PulseNews சுருக்கம்

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக நடித்துள்ள 'டிசி' திரைப்படம் கடந்த 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் வாமிகா கபி நாயகியாகவும், சஞ்சனா முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் மற்றும் படம் ஒட்டுமொத்தமாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இயக்குநர்களுக்காக பிரத்யேகமாக திரையிடப்பட்ட சிறப்பு காட்சியில் கலந்துகொண்ட சிவகார்த்திகேயன், இப்படம் மிகச்சிறந்த திரையரங்க அனுபவத்தைத் தருவதாகவும், ஒரு அதிரடி விருந்தாக அமைந்துள்ளதாகவும் பாராட்டியுள்ளார். இந்த சிறப்பு காட்சியில் கே.எஸ்.ரவிகுமார் மற்றும் ஆர்.கே.செல்வமணி உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema