PulseNews
சினிமா

தடை போட்ட பாரதிராஜா, கமல் படத்தில் நடிக்க மறுத்த மணிவண்ணன்: எம்.எஸ்.வி நடிப்பில் சூப்பர் ஹிட்டான படம்

தமிழ் சினிமாவில் இயக்குனர் பாரதிராஜாவின் உதவியாளராக இருந்து இயக்குனராக அறிமுகமான மணிவண்ணன், தனது குருநாதர் பாரதிராஜா சொன்னதால், கமல்ஹாசன் படத்தில் நடிக்காமல் தவிர்த்துள்ளார். அதன்பிறகு அந்த கேரக்டரில் இசையமைப்பாளர் எம்.எஸ்.வி நடித்திருந்தார். பாரதிராஜா இயக்கிய நிழல்கள், கடலோர கவிதைகள் உள்ளிட்ட சில படங்களுக்கு கதை எழுதிய மணிவண்ணன், 1982-ம் ஆண்டு வெளியான கோபுரங்கள் சாய்வதில்லை என்ற படத்தின் மூலம் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து அமைதிப்படை உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கிய மணிவண்ணன் காமெடி, குணச்சித்திரம், வில்லன் என பலதரப்பட்ட கேரக்டர்களில் நடித்து அசத்தியவர். 1980-ம் ஆண்டு வெளியான கல்லுக்குள் ஈரம் படத்தின் மூலம் திரையில் தனது முகத்தை காட்டிய மணிவண்ணன், அதன்பிறகு சிறு சிறு வேடங்களில் பல படங்களில் நடித்து வந்தார். 1988-ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான கொடி பறக்குது படத்தில் வில்லனாக நடித்திருந்த மணிவண்ணன், 1994-ம் ஆண்டு மணிமாறன் என்ற கேரக்டரில் நடித்திருந்தார், அதன்பிறகு ரஜினிகாந்த், விஜயகாந்த், கமல்ஹாசன், சத்யராஜ், ராமராஜன், உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலரின் படங்களில் காமெடி மற்றும் வில்லனாக நடித்துள்ளார். அந்த வரிசையில், 1996-ம் ஆண்டு வெளியான கமல்ஹாசனின் அவ்வை சண்முகி திரைப்படத்தில் முக்கிய காமெடி கேரக்டரில் நடித்திருந்தார், இந்த படத்தின் காமெடி காட்சிகள் இன்றைக்கும ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார். குறிப்பாக படங்கள் வெளியாகி 30 ஆண்டுகள் கடந்திருந்தாலும் இன்றைக்கும் இந்த காமெடி காட்சிகள், புதிதாக இருப்பது போன்றே இருக்கும். அதன்பிறகு கமல்ஹாசன் நடித்த பஞ்ச தந்திரம், பம்மல் கே சம்பந்தம், உள்ளிட்ட காமெடி படங்களில் நடித்திருந்தார். அதே சமயம் 1998-ம் ஆண்டு வெளியான காதலா காதலா படத்தில் மணிவண்ணன் நடிக்கவில்லை. இந்த படத்தை முதலில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்குவதாக இருந்தது. ஆனால் அப்போது நடிகர் மற்றும் இயக்குனர் சங்கங்கள் இடையே பிரச்னை இருந்ததால், வேலை நிறுத்தம் முடியும் வரை இந்த படத்தில் கமிட் ஆன முடியாது என்று கே.எஸ்.ரவிக்குமார் கூறியதால், சிங்கீதம் சீனிவாசராவ் படத்தை இயக்கியிருந்தார், அதேபோல் மணிவண்ணன் இயக்குனர் என்பதால் இந்த படத்தில் நடிக்க கூடாது என்று அப்போது இயக்குனர் சங்க தலைவராக இருந்த பாரதிராஜா கூறியுள்ளார். குருவின் பேச்சை தட்டாத மணிவண்ணன் அந்த படத்தில் நடிக்க மறுத்த நிலையில், அவர் நடிக்க இருந்த கேரக்டரில், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் நடித்திருந்தார். இந்த தகலை மணிவண்ணனின் தங்கை ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இந்த படமும் தமிழ் சினிமாவின் ஒரு க்ளாசிக் ஹிட் படமாக இன்றுவரை நிலைத்திருக்கிறது.

The Indian Express13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
தடை போட்ட பாரதிராஜா, கமல் படத்தில் நடிக்க மறுத்த மணிவண்ணன்: எம்.எஸ்.வி நடிப்பில் சூப்பர் ஹிட்டான படம்
PulseNews சுருக்கம்

இயக்குநர் பாரதிராஜாவின் உதவியாளராகப் பணியாற்றிய மணிவண்ணன், தனது குருவின் அறிவுறுத்தலை ஏற்று கமல்ஹாசனின் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை மறுத்தார். பின்னர் அந்த கதாபாத்திரத்தில் இசையமைப்பாளர் எம்.எஸ்.வி நடித்து, அந்தப் படம் சூப்பர் ஹிட்டானது.

நிழல்கள் மற்றும் கடலோரக் கவிதைகள் போன்ற படங்களுக்குக் கதை எழுதிய மணிவண்ணன், 1982-ல் கோபுரங்கள் சாய்வதில்லை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து அமைதிப்படை உள்ளிட்ட பல வெற்றிகரமான படங்களை அவர் இயக்கியுள்ளார்.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema