ஒரே டேக்கில் பாடணுமா? என்னால முடியாலயே; இளையராஜா இசையில் எஸ்.பி.பி கஷ்டப்பட்ட பாடல்: ரஜினி படத்தில் சூப்பர் ஹிட்
இளையராஜாவின் இசையில் ஏராளமான ஹிட் பாடல்களைப் பாடி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இளையராஜா இசையமைத்த பல பாடல்களை தனது தனித்துவமான குரலால் உயிர்ப்பித்த எஸ்.பி.பி., ஒரு பாடலைப் பாடுவதற்கு மிகவும் சிரமப்பட்டதாக இளையராஜாவே ஒரு இசை நிகழ்ச்சியில் சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்துள்ளார். இயக்குநர் கௌதம் மேனன் பங்கேற்ற அந்த நிகழ்ச்சியில், ‘கண்மணியே காதல் என்பது’ பாடல் குறித்து இளையராஜாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த இளையராஜா, அந்தப் பாடலைப் பதிவு செய்தபோது எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு பாடுவது மிகவும் கடினமாக இருந்தது. இந்தப் பாடலை ரெக்கார்ட் பண்ணும்போது ஒரே டேக்கில் பாட வேண்டியிருந்தது. பாலுவுக்கு அப்படி பாடுவது மிகவும் கஷ்டமாக இருந்தது. அந்தப் பாடல் ஒரு வகையில் எக்ஸ்பெரிமென்ட்டாகத்தான் இருந்தது. அவருக்கு முழுமையாகப் பாடுவதற்கு மிகவும் சிரமமாக இருந்ததால், பல ட்ராக்குகளில் பதிவு செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. பாட முடியாத இடங்களைத் தவிர்த்து, அவரால் முடிந்த பகுதிகளை வைத்து பாடலை நிறைவு செய்யலாம் என்று முடிவு செய்தோம். அதன்படி ஒரு ட்ராக்கில் சில பகுதிகளைப் பதிவு செய்துவிட்டு, பின்னர் மற்றொரு ட்ராக்கை பதிவு செய்து, இரண்டையும் இணைத்து பாடலை உருவாக்கினோம். இந்த வகையில் உருவான பாடல்தான் ‘கண்மணியே காதல் என்பது’. பாடலின் மென்மையான மெட்டு, எஸ்.பி.பி.யின் குரல் மற்றும் இளையராஜாவின் இசை என அனைத்தும் இணைந்து இந்தப் பாடலை ரசிகர்களின் மனதில் நீங்காத பாடலாக மாற்றினஎன்று கூறியுள்ளார். 1979-ம் ஆண்டு எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தல் பஞ்சு அருணாச்சலம் தயாரித்த ஆறிலிருந்து அறுபது வரை என்ற படத்தில் தான் இந்த பாடல் இடம் பெற்றுள்ளது. கும்பத்திற்காக 6 வயதில் இருந்து உழைக்கும் ரஜினிகாந்த், இறுதியில் எப்படி வாழ்க்கையில் முன்னேறுகிறார் என்பது தான் இந்த படத்தின் கதை. படத்தின் அனைத்து பாடல்களையும் பஞ்சு அருணாச்சலமே எழுதி இருந்தார். இதில் கண்மணியே காதல் என்பது பாடலின் மற்றொரு சிறப்பு அதன் இசை அமைப்பு. மென்மையான பகுதிகளிலிருந்து உணர்ச்சியை அதிகரிக்கும் இசை வரை, பாடலின் ஒவ்வொரு கட்டத்திலும் இளையராஜாவின் இசை நுணுக்கம் வெளிப்படுகிறது. அதற்கு ஏற்றவாறு எஸ்.பி.பி.யின் குரலும் பாடலுக்கு உயிரூட்டுகிறது. இந்தப் பாடலைப் பதிவு செய்யும்போது ஏற்பட்ட சிரமத்தை இளையராஜா தற்போது பகிர்ந்திருப்பது, ஒரு பாடல் ரசிகர்களிடம் ஹிட்டாக மாறுவதற்குப் பின்னால் இருக்கும் உழைப்பையும் தொழில்நுட்ப முயற்சிகளையும் வெளிப்படுத்துகிறது.

இளையராஜா இசையில் பல வெற்றிப் பாடல்களைத் தனது தனித்துவமான குரலில் பாடியவர் மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம். ரஜினிகாந்த் நடித்த படத்தில் இடம்பெற்ற ‘கண்மணியே காதல் என்பது’ பாடலைப் பாடும்போது எஸ்.பி.பி கடும் சிரமப்பட்டதாக இளையராஜா ஒரு நிகழ்ச்சியில் பகிர்ந்துள்ளார்.
இயக்குநர் கௌதம் மேனன் கலந்துகொண்ட அந்த இசை நிகழ்ச்சியில், குறிப்பிட்ட அந்தப் பாடலைப் பாடுவது குறித்து இளையராஜாவிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், ஒரே டேக்கில் பாடுவதற்கு எஸ்.பி.பி மிகுந்த சிரமப்பட்ட அந்தச் சுவாரஸ்யமான அனுபவத்தைப் பற்றி விளக்கியுள்ளார்.