ரெட்ரோ கெட்டப்பில் விஜய் சேதுபதி; ரிலீஸ் தேதியுடன் வெளியான போஸ்டர்
அட்லீ வழங்கும் அவரது தயாரிப்பு நிறுவனமான ‘ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டூடியோஸ்’ தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்கும் புதுப்படம் தலைப்பு வைக்காமலேயே படப்பிடிப்பில் இருந்தது. இப்படத்தை பாலாஜி தரணிதரன் இயக்குகிறார். இவர் ஏற்கனவே விஜய் சேதுபதியை வைத்து ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘சீதக்காதி’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இப்போது மூன்றாவது முறையாக இணைந்துள்ளார். இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாமலே இருந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ளது. போஸ்டர் மூலம் தெரிவித்த படக்குழு படத்திற்கு ‘பத்தா’ எனத் தலைப்பு வைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. போஸ்டரில் விஜய் சேதுபதி ரெட்ரோ லுக்கில் வாயில் சிகரெட் வைத்தபடி பார்க்கிறார். இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இப்படத்தை அட்லீயுடன் ஸ்டார் ஸ்டூடியோ 18 மற்றும் ஏ சினி 1 ஸ்டூடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இப்படம் அக்டோபர் 1ஆம் தேதி திரைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அட்லீ - விஜய் சேதுபதி - பாலாஜி தரணிதரன் என மூன்று பேர் இணைந்துள்ளதால் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படம் வெளியாகும் அதே அக்டோபர் 1ஆம் தேதி ராம் இயக்கத்தில் ‘ஏழு கடல் ஏழு மலை’, வைபவ் நடிப்பில் ‘மாறுவேஷம்’ உள்ளிட்ட படங்களும் வெளியாவது குறிப்பிடத்தக்கது. K-town history la nadula konjam pakkatha skip pannama paatha... You know it’s going to be a banger when this combo reunites for the third time 🔥 #Baththa will meet you on October 1st ❤️ #VJSxBalajiCombo #BaththaFromOct1 #BalajiTharaneetharan @jose_lijomol @SaiAbhyankkar ... pic.twitter.com/kV1zNAlxiN — VijaySethupathi (@VijaySethuOffl) August 12, 2026

அட்லீயின் ‘ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டூடியோஸ்’ தயாரிப்பில், பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில் விஜய் சேதுபதி ரெட்ரோ கெட்டப்பில் காட்சியளிக்கிறார்.
முன்னதாகப் பெயர் அறிவிக்கப்படாமல் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதியுடன் கூடிய அதிகாரப்பூர்வ போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. பாலாஜி தரணிதரனுடன் விஜய் சேதுபதி மூன்றாவது முறையாக இணைந்து பணியாற்றும் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.