PulseNews
வணிகம்

Chennai News Today LIVE Updates: எம்.எல்.ஏ.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதிக்கு ரூ.828 கோடி விடுவித்து அரசாணை.

Tamil Nadu News LIVE சென்னையில் இன்றைய எரிபொருள் விலையில் மாற்றமின்றி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், டீசல் ரூ.99.55-க்கும், ஒரு கிலோ சிஎன்ஜி (CNG) ரூ.97.00-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஆக.20-ல் காங்கிரஸ் பொதுக்குழு: மாணிக்கம் தாகூர் அறிவிப்பு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் தகவல் தொழில்நுட்பப் புரட்சி, இளைஞர்களுக்கு வாக்களிக்கும் வயது குறைப்பு மற்றும் பஞ்சாயத்துராஜ் சட்டத் திருத்தம் உள்ளிட்ட பல வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றங்களை நாட்டுக்கு வழங்கியவர் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி ஆவார். அவரது பிறந்தநாளைச் சிறப்பிக்கும் வகையில், வரும் ஆகஸ்ட் 20-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியின் சிறப்புப் பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் அமைப்புப் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், தமிழகப் பொறுப்பாளர் குலாம் அகமது மிர், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொள்ள உள்ளனர். எனவே, அழைப்பு விடுக்கப்பட்டுள்ள அனைத்து நிர்வாகிகளும் இக்கூட்டத்தில் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

The Indian Express13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
Chennai News Today LIVE Updates: எம்.எல்.ஏ.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதிக்கு ரூ.828 கோடி விடுவித்து அரசாணை.
PulseNews சுருக்கம்

தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதிக்காக 828 கோடி ரூபாயை விடுவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சென்னையில் இன்றைய எரிபொருள் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை. அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் 107.77 ரூபாய்க்கும், டீசல் 99.55 ரூபாய்க்கும், ஒரு கிலோ சிஎன்ஜி 97 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஆகஸ்ட் 20-ஆம் தேதி காங்கிரஸ் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என மாணிக்கம் தாகூர் அறிவித்துள்ளார்.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#business