டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன் பதவி விலகல்
டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன், தனது பதவிக்காலம் முடிவடையும் 2027 பிப்ரவரி 20-ம் தேதியுடன் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். மீண்டும் தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். 63 வயதான சந்திரசேகரன், டாடா குழுமத்தின் இயக்குநர் குழுவிடம் தனது முடிவைத் தெரிவித்துள்ளார். இருப்பினும், தற்போதைய பதவிக்காலம் முடியும் வரை அவர் தொடர்ந்து பணியாற்றுவார். சந்திரசேகரனின் பதவிக்காலத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க சர் தோராப்ஜி டாடா அறக்கட்டளையும், சர் ரத்தன் [...]

டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக பணியாற்றி வரும் என். சந்திரசேகரன், தனது பதவிக்காலம் முடிவடையும் 2027 பிப்ரவரி 20-ம் தேதியுடன் அந்தப் பொறுப்பில் இருந்து விலக முடிவெடுத்துள்ளார். தான் மீண்டும் தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்கப் போவதில்லை என்பதை அவர் டாடா குழுமத்தின் இயக்குநர் குழுவிடம் முறைப்படி தெரிவித்துள்ளார்.
63 வயதான சந்திரசேகரன், தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள தனது பதவிக்காலம் நிறைவடையும் வரை தொடர்ந்து பணியாற்றுவார். அவருக்குப் பதவி நீட்டிப்பு வழங்க அறக்கட்டளைகள் முன்வந்த போதிலும், அவர் இந்த முடிவை அறிவித்துள்ளார்.