இயந்திரத்தில் கொட்டும் அரிசி; மக்கள் மகிழ்ச்சி
சத்தீஸ்கர் மாநிலத்தில் அரசு கொண்டுவந்துள்ள புதிய திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அதாவது, ரேஷன் அரிசியை ஏடிஎம் இயந்திரத்தின் மூலமாக விநியோகிக்கும் தானிய ஏடிஎம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, அந்த ஏடிஎம் -ல் பயனாளிகளுக்கு 24 மணி நேரமும் ரேஷன் அரிசி விநியோகிக்கப்படும் . தானியங்கி முறையில் செயல்படும் இந்த திட்டத்திற்கு 'அன்ன பூர்த்தி தானிய ஏடிஎம்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. 2500 கிலோ கொள்ளளவு கொண்ட அந்த இயந்திரத்தில், பயனாளர்கள் தங்களது ரேஷன் அட்டையின் விவரங்களை உள்ளிட்டுக் கைரேகையைப் பதிவு செய்தால் அவர்களுக்கான அரிசி இயந்திரத்தின் மூலமாக விநியோகிக்கப்படும். இந்த தானிய ஏடிஎம் கள் உள்ளூர் சுய உதவி (ஜோதி) குழுக்களால் இயக்கப்படுகிறது. அரிசியை இயந்திரத்தில் நிரப்புவதும், பயனாளிகளுக்கு விநியோகிப்பதும் தானியங்கி முறையில் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. இந்த திட்டத்திற்கு உலக உணவுத் திட்டம் ஆதரவு அளித்து வருகிறது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் ரேஷன் அரிசியை வழங்கும் புதிய தானிய ஏடிஎம் இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 'அன்ன பூர்த்தி தானிய ஏடிஎம்' என அழைக்கப்படும் இந்த இயந்திரங்கள் மூலம், மக்கள் தங்களுக்குத் தேவையான அரிசியை 24 மணி நேரமும் பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த இயந்திரத்தில் 2500 கிலோ அரிசியைச் சேமித்து வைக்கும் வசதி உள்ளது. பயனாளிகள் தங்களின் ரேஷன் அட்டை விவரங்களைப் பதிவு செய்வதன் மூலம், தானியங்கி முறையில் அரிசியைப் பெற்றுக்கொள்ளலாம்; அரசு கொண்டுவந்துள்ள இந்த புதிய திட்டத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.