TVK Budget: ஒவ்வொரு அமைச்சருடனும் 3 மணி நேர ஆலோசனை.. எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள விஜய் அரசின் முதல் பட்ஜெட்!

தமிழ்நாட்டின் பட்ஜெட் வரும் ஆகஸ்ட் 5ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. முதன்முறையாக ஆட்சியைக் கைப்பற்றியுள்ள தவெக அரசு தாக்கல் செய்ய உள்ள முதல் பட்ஜெட் என்பதால் இந்த பட்ஜெட் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

3 மணி நேர ஆலோசனை:

அனுபவமில்லாத அரசு என்று எதிர்க்கட்சியினரால் தொடர்ந்து விமர்சனத்திற்கு ஆளாகி வரும் நிலையில், தவெக-வின் பட்ஜெட்டை அதற்கு பதிலடி தரும் வகையில் உருவாக்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சர் விஜய்யின் உத்தரவின்பேரில் நிதியமைச்சர் மரிய வில்சன் நிதிநிலை அறிக்கையை தயாரித்து வருகிறார்.

ஒவ்வொரு துறையின் அமைச்சர்களுடனும் 3 மணி நேரம் ஆலோசனை நடத்தியுள்ளார் மரியவில்சன். தமிழ்நாட்டின் கடந்த கால பட்ஜெட்டுகளின் அடிப்படையில் தமிழ்நாட்டின் கடன்சுமை பல லட்சம் கோடியில் உள்ளது. தவெக அரசுக்கு மிகப்பெரிய அளவில் சவாலாக இந்த கடன் சுமை உள்ளது. தவெக-வின் பட்ஜெட் இந்த கடனை மேலும் அதிகரிக்கும் வகையில் இருக்கக்கூடாது என்பதே அவர்களுக்கு உள்ள மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது.

வீண் செலவை குறைக்க உத்தரவு:

அதேசமயம், மக்களின் அடிப்படைத் தேவைகளை முழுமையாக நிறைவேற்றித் தரும் வகையில் இந்த பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், கடந்த கால நிதிநிலை அறிக்கைகளில் புதிய கட்டிடங்கள் கட்டுவது, சாலைகள் அமைப்பது, பாலங்கள் கட்டுவது போன்ற பணிகளுக்கான செலவு கணக்கில் முறைகேடுகள் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்து வரும் சூழலில், அதுபோன்ற முறைகேடுகள் தேவையற்ற செலவீனங்களை காட்டாத பட்ஜெட்டை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாட்டின் கஜானாவில் என்ன இருக்கிறது? என்பதை வெளிப்படையாக அறிவித்தே இந்த பட்ஜெட்டை தொடங்க தடெக அரசு முடிவு செய்துள்ளது. தொலைநோக்குப் பார்வையிலும் இந்த பட்ஜெட்டை உருவாக்கவும் முதலமைச்சர் விஜய் நிதியமைச்சர் மரியவில்சனுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மரிய வில்சனுக்கு முழு சுதந்திரம்:

தமிழ்நாட்டின் கடன் சுமையை அதிகரிக்கும் எந்தவிதமான வீண் செலவையும் முழுவதும் நிறுத்துவதற்கான முழு சுதந்திரத்தையும் மரியவில்சனுக்கு முதலமைச்சர் விஜய் அளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் 5ம் தேதி தாக்கலாக உள்ள முதலமைச்சர் விஜய் அரசின் முதல் பட்ஜெட்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்புகளை வெளியிடுவதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

ஆகஸ்ட் 5-ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள தவெக அரசின் முதல் பட்ஜெட்டை, மாநிலத்தின் கடன் சுமையை உயர்த்தாத வகையிலும், வீண் செலவுகளைக் குறைத்து மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதமாகவும் வடிவமைக்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதற்காக நிதியமைச்சர் மரிய வில்சன் ஒவ்வொரு துறை அமைச்சர்களுடனும் தலா 3 மணி நேரம் ஆலோசித்து, நிதிநிலை அறிக்கையை வெளிப்படையான தொலைநோக்குப் பார்வையுடன் தயாரித்து வருகிறார்.
மூலம்: Abp News