சென்னையின் பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவை வளாகம்: ரூ.1,200 கோடியில் பிரம்மாண்ட திட்டம்
சென்னையின் பட்டினப்பாக்கம் மற்றும் ஃபோர்ஷோர் எஸ்டேட் பகுதியில் புதிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலக வளாகத்தை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. சுமார் 25.16 ஏக்கர் நிலப்பரப்பில் அமையவிருக்கும் இந்த பிர…
சென்னையின் பட்டினப்பாக்கம் மற்றும் ஃபோர்ஷோர் எஸ்டேட் பகுதியில் புதிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலக வளாகத்தை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. சுமார் 25.16 ஏக்கர் நிலப்பரப்பில் அமையவிருக்கும் இந்த பிரம்மாண்ட கட்டுமானத்திற்காக, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆகியவை நிலத்தைப் பயன்படுத்துவதற்கான அனுமதியை சனிக்கிழமையன்று வழங்கியுள்ளன.
சுமார் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படவுள்ள இந்தத் திட்டத்தில் 15 அடுக்கு மாடிகளைக் கொண்ட கட்டிடம் கட்டப்பட உள்ளது. இந்தத் திட்டத்திற்கு நடிகர் விஜய் ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது கட்டுமானப் பணிகளைத் தொடங்குவதற்கான முதற்கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், நிர்வாக ரீதியிலான கொள்கை விளக்க அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான நடவடிக்கைகள் தற்போது துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.