சென்னையில் ரூ.3,247 கோடியில் புதிய தலைமைச் செயலகம்: 15 மாடி கட்டிடமாக அமையவுள்ளது
சென்னையில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகத்தை அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் இதற்கான அறிவிப்பை வெளியிட்ட நிலையில், பட்டினப்பாக்கம் பகுதியில் சு…

சென்னையில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகத்தை அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் இதற்கான அறிவிப்பை வெளியிட்ட நிலையில், பட்டினப்பாக்கம் பகுதியில் சுமார் 25 முதல் 26.5 ஏக்கர் பரப்பளவில் இந்த பிரம்மாண்டமான நிர்வாக மையம் அமைய உள்ளது. 15 மாடிகளைக் கொண்ட இந்த அதிநவீன கட்டிடத்தை உருவாக்குவதற்கான பணிகளில் அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இந்தத் திட்டத்திற்காக ஆரம்பத்தில் 1,200 கோடி ரூபாய் மதிப்பீடு குறிக்கப்பட்ட நிலையில், தற்போது 3,247 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இடநெருக்கடியைத் தவிர்க்கவும், வருங்கால அரசு நிர்வாகத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் இந்த புதிய வளாகம் உருவாக்கப்படுகிறது. இதற்கான கொள்கை அளவிலான நிர்வாக ஒப்புதல் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய தலைமைச் செயலகத்தை அமைப்பதற்காக அரசு மூன்று இடங்களைத் தேர்வு செய்து ஆய்வு மேற்கொண்டது. இந்த இடங்களில் உள்ள சாத்தியக்கூறுகள் மற்றும் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் குறித்து விரிவான ஆய்வுகள் நடத்தப்பட்டன. இறுதியாக ஒரு இடம் முதலமைச்சரால் தேர்வு செய்யப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையின் புதிய அரசு நிர்வாக மையமாக அமையும் இந்த வளாகத்திற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.