பல்லாவரம்-துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் ரூ.1,020 கோடிக்கு பிரம்மாண்ட நிலம் விற்பனை
சென்னை பல்லாவரம்-துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் அமைந்துள்ள 12 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு, 1,020 கோடி ரூபாய்க்கும் மேலான மதிப்பீட்டில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. செமிகண்டக்டர் மற்றும் தகவல் தொழி…

சென்னை பல்லாவரம்-துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் அமைந்துள்ள 12 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு, 1,020 கோடி ரூபாய்க்கும் மேலான மதிப்பீட்டில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. செமிகண்டக்டர் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் முன்னணியில் உள்ள கே.எல்.ஏ டென்கர் சாப்ட்வேர் இந்தியா நிறுவனம் இந்த நிலத்தை விலைக்கு வாங்கியுள்ளது.
இந்தப் பகுதியில் இதுவரை நடைபெற்ற நிலப் பரிவர்த்தனைகளிலேயே இதுவே மிக அதிக மதிப்பிலான ஒப்பந்தமாகக் கருதப்படுகிறது. இந்த பிரம்மாண்ட முதலீடு, அப்பகுதியை சென்னையின் அடுத்த முக்கிய தகவல் தொழில்நுட்ப மையமாக உருவெடுக்க வைக்கும் என்ற வலுவான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது இந்த ரேடியல் சாலைப் பகுதி உலகளாவிய திறன் மையங்கள் (GCC) அமைவதற்கான மிக முக்கியமான வழித்தடமாக வேகமாக வளர்ந்து வருகிறது. கே.எல்.ஏ டென்கர் நிறுவனத்தின் இந்த வருகை, இப்பகுதியை வணிக ரீதியாக மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.