செப்டம்பர் 11-ல் நாடு தழுவிய வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்: சேவைகள் முடங்கும் அபாயம்
நாடு முழுவதும் உள்ள வங்கி ஊழியர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 11-ஆம் தேதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த திடீர் போராட்டத்தினால் வங்க…

நாடு முழுவதும் உள்ள வங்கி ஊழியர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 11-ஆம் தேதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த திடீர் போராட்டத்தினால் வங்கிச் சேவைகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதால், வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகும் நிலை உருவாகியுள்ளது.
வாரம் ஐந்து நாட்கள் மட்டுமே வேலை என்ற முறையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பது வங்கி ஊழியர்களின் முதன்மையான கோரிக்கையாக உள்ளது. மேலும், செயல்திறன் சார்ந்த ஊக்கத்தொகை (PLI) திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோரிக்கைகளை தொழிற்சங்கங்கள் முன்வைத்துள்ளன.
இந்த வேலைநிறுத்தப் போராட்டமானது மூன்று முதல் நான்கு நாட்கள் வரை வங்கிகளின் சேவைகளை முடக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நாடு தழுவிய அளவில் வங்கிப் பணிகள் பெரிதும் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.