PulseNews
வணிகம்

பயணிகளுக்கு மகிழ்ச்சி! சென்னை, போடி உட்பட 14 சிறப்பு ரயில்கள் சேவை நீட்டிப்பு!

இந்தியாவில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது ரயில் சேவை. ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். அவர்களுக்காக பல்வேறு சலுகைகள் திட்டங்களை கொண்டு வருகிறது. குறிப்பாக தொலைதூரம் பயணிப்பவர்களுக்கு, ரயில் சேவை வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. இந்திய ரயில்வே நாள்தோறும் 19,000 ரயில்களை இயக்கி வருகிறது.

இதில் நாள்தோறும் 4 கோடி மக்கள் பயணிக்கிறார்கள். சாதாரண புறநகர் ரயில்கள், விரைவு ரயில்கள், வந்தே பாரத் ரயில்கள், சரக்கு ரயில்கள் என இதில் ஏராளம். குறிப்பாக குறைந்த கட்டணத்தில் தொலை தூர இடங்களுக்கு களைப்பின்றி செல்ல முடியும் என்பதால் அனைவரும் ரயில் பயணத்தை நாடி வருகின்றனர். குறிப்பாக ரயில் பயணிகளுக்கு ஏற்றவாரு ரயில் சேவைகளில் அவ்வப்போது பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது.

இந்த நிலையில் ,சென்னையில் இருந்து போடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி செல்லும் ரயில்கள் உட்பட 14 சிறப்பு ரயில்களின் சேவைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன. தாம்பரம்-போடி சிறப்பு ரயில் (06059) செப்.12-ல் இருந்து செப்.26 வரை 3 சேவைகளும், மறுமார்க்கத்தில் போடி - தாம்பரம் சிறப்பு ரயில் (06060) செப்.13-ல் இருந்து செப்.27 வரை 3 சேவைகளும் நீட்டிக்கப்பட்டுள்ளன. சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி சிறப்பு ரயில் (06045) செப்.4-ல் இருந்து செப்.25 வரை 4 சேவைகளும், மறுமார்க்கத்தில் கன்னியாகுமரி - எழும்பூர் சிறப்பு ரயில் (06046) செப்.6-ல் இருந்து செப்.27 வரை 4 சேவைகளும் நீட்டிக்கப்பட்டுள்ளன.

போத்தனூர்-சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயிலின் (06028) 12 சேவைகளும், மறுமார்க்கத்தில் (06027) 12 சேவைகளும் செப்.4-ல் இருந்து செப்.27 வரை நீட்டிக்கப்பட்டுள்ளன. திருநெல்வேலி - தாம்பரம் சிறப்பு ரயில் (06070) செப்.3-ல் இருந்து செப்.24 வரை 4 சேவைகளும், மறுமார்க்கத்தில் தாம்பரம் - திருநெல்வேலி சிறப்பு ரயில் (06069) செப்.4-ல் இருந்து செப்.25 வரை 4 சேவைகளும் நீட்டிக்கப்பட்டுள்ளன.

Abp News13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
பயணிகளுக்கு மகிழ்ச்சி! சென்னை, போடி உட்பட 14 சிறப்பு ரயில்கள் சேவை நீட்டிப்பு!
PulseNews சுருக்கம்

பயணிகளின் வசதிக்காக சென்னை மற்றும் போடி உள்ளிட்ட இடங்களுக்கு இயக்கப்பட்டு வரும் 14 சிறப்பு ரயில்களின் சேவையை நீட்டித்து இந்திய ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பு ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் தினசரி 19,000 ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், லட்சக்கணக்கான மக்கள் ரயில்களைப் பயன்படுத்தி வருகின்றனர். நீண்ட தூர பயணிகளுக்கு ரயில் சேவை மிகவும் பயனுள்ளதாக உள்ளதால், அவர்களுக்குத் தேவையான பல்வேறு சலுகைகளையும் திட்டங்களையும் ரயில்வே துறை செயல்படுத்தி வருகிறது.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#business