பரந்தூர் கைவிடப்பட்ட நிலையில் புது பிளான்.. சென்னை விமான நிலையத்திற்கு அடையாறு ஆற்றோரம் 4 கி.மீ மேம்பாலம்!
Chennai Airport Expansion Plan: பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டதைத் தொடர்ந்து, சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வது தொடர்பாகத் தமிழக அரசு தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது. அடையாறு ஆற்றின் இயற்கை நீரோட்டத்திற்கும் அருகிலுள்ள குடியிருப்புகளுக்கும் பாதிப்பில்லாத வகையில், பொழிச்சலூர் மற்றும் தாரப்பாக்கம் வழியாக 4 கி.மீ நீளத்தில் மேம்பால அணுகுசாலை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டதையடுத்து, சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்தை விரிவுபடுத்த தமிழக அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இதற்கான புதிய திட்டத்தின்படி, விமான நிலையத்தை அடைய விமானப் போக்குவரத்திற்கான அணுகுசாலையை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது.
அடையாறு ஆற்றின் நீர் ஓட்டத்தையோ அல்லது அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளையோ பாதிக்காத வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பொழிச்சலூர் மற்றும் தாரப்பாக்கம் வழியாக 4 கிலோமீட்டர் நீளத்தில் பிரத்யேக மேம்பால அணுகுசாலை அமைக்கப்பட உள்ளது.