PulseNews
வணிகம்

சவரனுக்கு ரூ.2,360 குறைஞ்சிடுச்சு: இன்னைக்கு தங்கம், வெள்ளி விலை என்ன தெரியுமா?

சர்வதேச பொருளாதார சூழல் காரணமாக, ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை கடுமையான ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. நேற்று (ஆகஸ்ட் 28) காலை வர்த்தகத்தில், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.75 குறைந்து ரூ.14,650-க்கும், சவரனுக்கு ரூ.600 குறைந்து ரூ.1,17,200-க்கும் விற்பனையானது. ஆனால், மாலையில் திடீரென விலை அதிகரித்தது. அதன்படி கிராமுக்கு ரூ.150 உயர்ந்து ரூ.14,800-ஆகவும், சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்து ரூ.1,18,400-ஆகவும் விற்பனை செய்யப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இன்றைய அதிரடி சரிவு (ஆகஸ்ட் 29): இந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்தின் இறுதி வாரத்தின் கடைசி நாளான இன்று (ஆகஸ்ட் 29), தங்கம் விலை அதிரடியாகக் குறைந்து நகைப்பிரியர்களுக்குப் பெருத்த நிம்மதியை அளித்துள்ளது. இன்றைய நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.295 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,505-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.2,360 அதிரடியாகக் குறைந்து, ஒரு சவரன் ரூ.1,14,840-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், 18 காரட் தங்கத்தின் விலையும் கிராமுக்கு ரூ.295 குறைந்து, ஒரு கிராம் ரூ.12,275-க்கும், சவரனுக்கு ரூ.2,360 குறைந்து ஒரு சவரன் ரூ.98,200-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையும் சரிவு: தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளியின் விலையிலும் இன்று வீழ்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம் ரூ.260-க்கும், கிலோவுக்கு ரூ.5,000 குறைந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.2,60,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வார இறுதியில் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் ஏற்பட்டுள்ள இந்த அதிரடி வீழ்ச்சி, நகை வாங்கத் திட்டமிட்டிருப்பவர்களுக்குச் சாதகமான வாய்ப்பாக அமைந்துள்ளது.

The Indian Express16 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
சவரனுக்கு ரூ.2,360 குறைஞ்சிடுச்சு: இன்னைக்கு தங்கம், வெள்ளி விலை என்ன தெரியுமா?
PulseNews சுருக்கம்

சர்வதேச பொருளாதார மாற்றங்களால் ஆகஸ்ட் மாத தொடக்கம் முதலே தங்கத்தின் விலையில் கடும் ஏற்ற இறக்கங்கள் நிலவுகின்றன. நேற்று காலை வர்த்தகத்தில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 75 ரூபாயும், சவரனுக்கு 600 ரூபாயும் குறைந்து முறையே 14,650 ரூபாய்க்கும் 1,17,200 ரூபாய்க்கும் விற்பனையானது.

இருப்பினும், நேற்று மாலை தங்கத்தின் விலை திடீரென உயர்ந்து கிராமுக்கு 150 ரூபாய் அதிகரித்து 14,800 ரூபாயாகவும், சவரனுக்கு 1,200 ரூபாய் அதிகரித்து 1,18,400 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது. ஒட்டுமொத்தமாக சவரனுக்கு 2,360 ரூபாய் குறைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#business