PulseNews
வணிகம்

தாய்லாந்து போறீங்களா? 50% செலவை அரசாங்கமே ஏற்கும்; எவ்ளோ பெரிய மாஸ்டர் பிளான்

இந்தியர்கள் உட்பட பல வெளிநாட்டு பயணிகள் அதிகம் செல்லும் நாடுகளில் முக்கியமான ஒரு இடம் என்றால் அது தாய்லாந்து தான். இந்நிலையில், பார்வையாளர்கள் செலவிடும் விதத்தையும், சுற்றுலாத் தலங்களுக்கு நிதி ஒதுக்கப்படும் விதத்தையும் பாதிக்கக்கூடிய இரண்டு முக்கிய சுற்றுலா நடவடிக்கைகளுக்கு தாய்லாந்து தயாராகி வருகிறது. அந்நாடு, 'தாய் டிராவல் தாய் பிளஸ்' என்ற உள்நாட்டு சுற்றுலா மானியத் திட்டத்தை செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. 4,500 ஆண்டுகளாக சீல் வைக்கப்பட்ட கதவு... 100 அடி ஆழத்தில் நின்ற ரோபோ; எகிப்து பிரமிடின் ரகசிய அறை அதே நேரத்தில், தாய்லாந்திற்குள் நுழையும் வெளிநாட்டுப் பயணிகளிடம் கட்டணம் வசூலிக்க அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. இந்தப் பணம் சுற்றுலா உள்கட்டமைப்பு, பயணிகளின் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு ஆகியவற்றுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் பயன்படுத்தப்பட உள்ளது. வெளிநாட்டுப் பயணிகளுக்கான இந்தக் கட்டணத்தின் விவரங்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. கட்டணத் தொகை, வசூலிக்கும் முறை அல்லது தொடங்கும் தேதி ஆகியவை இதுவரை அறிவிக்கப்படவில்லை. உள்நாட்டுச் சுற்றுலாவுக்காக ‘தாய் டிராவல் தாய் பிளஸ்’ திட்டம் சுற்றுலாப் பயணிகள் நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று வர ஏதுவாக, 1.75 பில்லியன் பாட் (Baht) பட்ஜெட்டில் 'தாய் டிராவல் தாய் பிளஸ்' (Thai Travel Thai Plus) என்ற 4 மாதச் சிறப்புத் திட்டத்தைத் தாய்லாந்து அரசு வரும் செப்டம்பரில் தொடங்கவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தகுதிபெறும் நபர்களின் செலவில் 50% தொகையை (அதிகபட்சமாக 3,000 பாட் வரை) அரசாங்கமே ஏற்கும் என்று கூறப்படுகிறது. அனைத்து சேவைகளுக்கும் சலுகை வெறும் ஹோட்டல் மற்றும் உணவகங்களுக்கு மட்டும் இன்றி, உள்ளூர் வழிகாட்டிகள், வாகன வாடகை, சுற்றுலாத் தலங்களின் நுழைவுக் கட்டணம் மற்றும் உள்ளூர் கைவினைப் பொருட்கள் வாங்குவதற்கும் இந்த வவுச்சர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் தாய்லாந்து நாட்டின் உள்நாட்டுப் பொருளாதாரத்தில் 26 பில்லியன் பாட் வரை பணப்புழக்கம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் நிலை என்ன? வெளிநாட்டுப் பயணிகளுக்கான தனிக் கட்டணம் மிகவும் ஆரம்பக் கட்டத்தில் உள்ளது. இந்த முன்மொழிவின்படி, தாய்லாந்திற்குள் நுழையும் வெளிநாட்டினர் கட்டணம் செலுத்த வேண்டும். அந்த வருவாய் தாய்லாந்து சுற்றுலா மேம்பாட்டு நிதிக்குச் செல்லும் என்று 'தி நேஷன் தாய்லாந்து' செய்தி வெளியிட்டுள்ளது.

The Indian Express22 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
தாய்லாந்து போறீங்களா? 50% செலவை அரசாங்கமே ஏற்கும்; எவ்ளோ பெரிய மாஸ்டர் பிளான்
PulseNews சுருக்கம்

இந்தியர்கள் உள்ளிட்ட சுற்றுலாப் பயணிகள் அதிகம் விரும்பிச் செல்லும் நாடுகளில் தாய்லாந்து முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. தற்பொழுது, சுற்றுலாத் தலங்களுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் பயணிகளின் செலவு செய்யும் முறையை மாற்றியமைக்கும் வகையில் இரண்டு புதிய சுற்றுலா நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு முன்னெடுக்க உள்ளது.

இதன் ஒரு பகுதியாக, 'தாய் டிராவல் தாய் பிளஸ்' என்ற உள்நாட்டு சுற்றுலா மானியத் திட்டத்தை வரும் செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்த தாய்லாந்து அரசு திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் பயணிகளின் செலவில் 50 சதவீதத்தை அரசே ஏற்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#business