FD vs SIP: 2026-ல் உங்கள் பணத்தை எங்கே போட்டால் அதிக லாபம்?
FD vs SIP: பணம் முதலீடு செய்ய நினைப்பவர்களுடைய முக்கிய கேள்வியே FD போடலாமா? இல்ல SIP தொடங்கலாமா? என்பதுதான். இதற்கு முதலீட்டு காலம், வருமானத் தேவைகள் மற்றும் ரிஸ்க் எடுக்கத் தயாரா ? என்பதுதான் சரியான தேர்வை நிர்ணயிக்கும்.

முதலீடு செய்யத் திட்டமிடுபவர்கள் மத்தியில் நிலையான வைப்பு நிதி (FD) மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டு முறை (SIP) ஆகியவற்றில் எது சிறந்தது என்ற குழப்பம் பொதுவாக எழுவதுண்டு. 2026-ம் ஆண்டில் பணத்தை எங்கே முதலீடு செய்வது என்பது குறித்த கேள்விக்கு, அவரவர் முதலீடு செய்யும் கால அளவு, வருமான எதிர்பார்ப்புகள் மற்றும் அபாயங்களை ஏற்கும் மனப்பக்குவம் ஆகியவையே சரியான தீர்மானத்தை வழங்குகின்றன.
எனவே, உங்களது முதலீட்டு இலக்குகள் மற்றும் இடர் மேலாண்மைத் திறனைப் பொறுத்தே FD அல்லது SIP ஆகியவற்றில் எதைத் தேர்வு செய்வது என்பதை முடிவு செய்ய வேண்டும். இந்த காரணிகளைக் கருத்தில் கொள்வது முதலீட்டாளர்களுக்கு சிறந்த பலனைத் தரும்.