திருநெல்வேலியில் மின் தடை: பராமரிப்பு பணிகள்! உங்கள் பகுதிக்கு பாதிப்பா? தெரிந்துகொள்ளுங்கள் மக்களே..

தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், திருநெல்வேலி மின் பகிர்மான வட்டத்தில் நாளை காலை 9 மணி முதல் பல்வேறு மாவட்டங்களில் மின் தடை செய்யப்படவுள்ளது.

கங்கைகொண்டான் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (29.8.2026, சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும். இதன் காரணமாக பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது. சீவலப்பேரி, கங்கைகொண்டான், பாலாமடை, பதினாலாம்பேரி, குப்பக்குறிச்சி, பருத்திகுளம், துறையூர், ராஜாபதி, வெங்கடாசலபுரம், ஆலடிப்பட்டி, அலவந்தான்குளம், செழியநல்லூர் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.

மேலும் வள்ளியூர் கோட்ட செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, நவலடி மற்றும் சங்கனான்குளம் துணை மின் நிலையங்களில் நாளை மறுநாள் (29.8.2026, சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்சொன்ன துணை மின் நிலையங்களில் மின்விநியோகம் தடை செய்யப்படும். இதன் காரணமாக பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ள நேரங்களில் மின்விநியோகம் இருக்காது.

நவலடி, ஆற்றங்கரை பள்ளிவாசல், தோட்டவிளை, தெற்குபுளிமான்குளம், கோடாவிளை, மரக்காட்டுவிளை, செம்பொன்விளை, காளிகுமாரபுரம், குண்டல், உவரி, கூடுதாழை, கூட்டபணை, குட்டம், பெட்டைகுளம், உறுமன்குளம். மன்னார்புரம், வடக்கு விஜயநாராயண், தெற்கு விஜயநாராயண், இட்டமொழி, நம்பிகுறிச்சி, தெற்கு ஏராந்தை, சிவந்தியாபுரம், பரப்பாடி ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.

இதேபோல் கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கல்லிடைக்குறிச்சி மின் கோட்டத்திற்குட்பட்ட மேலக்கல்லூர் துணைமின் நிலையத்தில் நாளை மறுநாள் (29.8.2026, சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்சொன்ன துணைமின் நிலையத்தில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின்விநியோகம் பாதுகாப்பு கருதி நிறுத்தி வைக்கப்படும். இதன் காரணமாக மேலக்கல்லுர், சுத்தமல்லி, சங்கன்திரடு, கொண்டாநகரம், நடுக்கல்லுர், பழவூர், கருங்காடு, திருப்பணிகரிசல்குளம், துலுக்கர்குளம், பொழிக்கரை, வெள்ளாளங்குளம் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.

மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.

திருநெல்வேலி மின் பகிர்மான வட்டத்தில், நாளை காலை 9 மணி முதல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. இதையொட்டி, பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு மின் தடை இருக்குமா என்பதை முன்கூட்டியே சரிபார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மின்வாரிய ஊழியர்கள் மின் கம்பங்கள் மற்றும் மின் பாதைகளில் உள்ள மரக்கிளைகளை அகற்றுதல் மற்றும் சிறிய பழுதுகளைச் சரிசெய்தல் போன்ற பல்வேறு பராமரிப்புப் பணிகளில் ஈடுபட உள்ளனர். தமிழ்நாட்டில் இத்தகைய பராமரிப்புப் பணிகள் நடைபெறும் போது, முந்தைய நாளே மின் தடை குறித்து பொதுமக்களுக்கு அறிவிக்கப்படுவது வழக்கம்.