PulseNews
வணிகம்

Land registration : ஆன்லைன் பத்திரப்பதிவில் புது ரூல்ஸ்.! LOAN தொகை விடுவிப்பு- வங்கிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு

இணையவழி ஆவணப்பதிவு- கடன் தொகை

தமிழகத்தில் சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு செல்லாமல், வீட்டில் இருந்தே வீடு, மனை பத்திரப்பதிவு செய்யும் திட்டமானது தொடங்கப்பட்டுள்ளது. அந்த வகையில், பத்திரப் பதிவுக்கு செல்லும் போது அதற்கு முன்கூட்டியே டோக்கன் பெற்றால் மட்டுமே அன்றைய தினம் பத்திரப்பதிவிலேயே பங்கேற்க முடியும். இந்நிலையில் பத்திர பதிவு அலுவலகத்திற்கு வராமல் வருகையில்லா இணையவழி ஆவணப்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. இத்ன மூலம் எங்கிருந்தாலும் தங்களது நிலமோ, வீடுகளையோ பதிவு செய்ய முடியும். இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பதிவுத்துறை அடமான ஆவணப்பதிவு விவரம் பிரதிபலித்துள்ளதை உறுதி செய்த பின்னரே கடன் தொகையை விடுவிக்குமாறு வங்கிகளை பதிவுத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

அடமான ஆவணங்களும் இணையவழியில் பதிவு

இது தொடர்பாக பதிவுத்துறை தலைவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பதிவுத்துறையில் தற்போது எங்கிருந்தும் (Anywhere Registration) பதிவு திட்டத்தின்கீழ் வருகையில்லா ஆவணப்பதிவு (Presenceless Registration) மூலம் குறிப்பிட்ட வகை ஆவணங்களுடன் உரிமை ஆவணங்களின் ஒப்படைப்பு (MODT) மற்றும் அடமான ஆவணங்களும் இணையவழியில் பதிவு செய்யும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பதிவு அலுவலகங்களுக்கு நேரில் வர வேண்டிய தேவையை குறைத்து, பதிவு நடைமுறையை எளிமைப்படுத்தவும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடன் தொகை விடுவிப்பு

ஒரே சொத்தின் மீது பல்வேறு கடன்கள் பெறப்பட்டு, மோசடியாக பல்வேறு அடமான ஆவணங்கள் பதிவு செய்யப்படுவதை தடுக்கும் வகையில், அரசு கடிதம் (Ms) எண்.114, நாள் 12.08.2026 மூலம் வில்லங்கச் சான்றிதழில் (EC) அடமான ஆவணப்பதிவு விவரம் பிரதிபலித்துள்ளதை உறுதி செய்த பின்னரே கடன் தொகையை விடுவிக்குமாறு மாநில அளவிலான வங்கியாளர் குழு (SLBC) மூலம் மாநிலத்தில் செயல்படும் அனைத்து வங்கிகளுக்கும் அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Abp News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
Land registration : ஆன்லைன் பத்திரப்பதிவில் புது ரூல்ஸ்.! LOAN தொகை விடுவிப்பு- வங்கிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு
PulseNews சுருக்கம்

தமிழகத்தில் சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமலேயே, வீட்டிலிருந்தபடி நிலம் மற்றும் வீடுகளைப் பதிவு செய்யும் ‘வருகையில்லா இணையவழி ஆவணப்பதிவு’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் தாங்கள் இருக்கும் இடத்திலிருந்தே தங்களது சொத்துக்களைப் பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, பத்திரப்பதிவிற்குச் செல்லும் முன் முன்கூட்டியே டோக்கன் பெற்றால் மட்டுமே குறிப்பிட்ட நாளில் பதிவில் பங்கேற்க முடியும் என்ற முறை அமலில் இருந்தது. தற்போது, கடன் தொகை விடுவிப்பு தொடர்பாக வங்கிகளுக்குப் புதிய வழிகாட்டுதல்கள் மற்றும் முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#business