PulseNews
வணிகம்

தீவன விலை உயர்வு: மக்காச்சோள இறக்குமதி வரியை ரத்து செய்யக் கோரிக்கை

கால்நடைத் தீவனங்களின் உற்பத்திச் செலவு கடுமையாக உயர்ந்துள்ளதால், மக்காச்சோள இறக்குமதி மீதான 15 சதவீத இறக்குமதி வரியை (TRQ) முழுமையாக ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் மற்றும் கால்நடை வளர்ப்போர் ஒன்றிய அரசுக்கு அவசரக் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நல சங்க தலைவர் ராஜேந்திரன் இதுகுறித்து கூறுகையில், 'மக்காச்சோளம், சோயா புண்ணாக்கு மற்றும் பருத்திப் பிண்ணாக்கு ஆகியவற்றின் கட்டுக்கடங்காத விலையேற்றத்தால் பால் உற்பத்தித் துறை வரலாறு காணாத நிதி நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது. பால் உற்பத்தியின் ஒட்டுமொத்தப் பராமரிப்புச் செலவில் 60 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை தீவனப் பொருட்களுக்கே செலவாகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அனைத்து முக்கியத் தீவனப் பொருட்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு குவாண்டாலுக்கு 2,000 ரூபாய் முதல் 2,150 ரூபாய் வரை விற்கப்பட்ட மக்காச்சோளம் அல்லது சோளம், தற்போது 25 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை உயர்ந்து 2,600 ரூபாய் முதல் 2,850 ரூபாய் வரை விற்பனையாகிறது. சோயா புண்ணாக்கின் விலை கடந்த ஆண்டு குவாண்டாலுக்கு 3,600 ரூபாய் முதல் 3,800 ரூபாயாக இருந்த நிலை மாறி, தற்போது 20 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை உயர்ந்து 4,500 ரூபாய் முதல் 5,200 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. மேலும் பருத்திப் பிண்ணாக்கு விலை குவாண்டாலுக்கு 2,850 ரூபாயிலிருந்து 3,900 ரூபாய் முதல் 4,200 ரூபாய் வரையிலும், கடலை புண்ணாக்கு விலை 3,600 ரூபாயிலிருந்து 4,500 ரூபாய் முதல் 4,850 ரூபாய் வரையிலும் 25 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. எத்தனால் தயாரிப்பு மற்றும் கோழிப்பண்ணைத் தொழில்களுக்கான தேவை அதிகரித்ததால் மக்காச்சோளத்தின் சந்தை விலை அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஆதரவு விலையை விட மிக அதிகமாக உயர்ந்துள்ளது. எனவே, இறக்குமதி ஒதுக்கீட்டின் கீழ் மக்காச்சோளத்திற்கு விதிக்கப்படும் 15 சதவீத இறக்குமதி வரியை பூஜ்ஜியமாகக் குறைக்க வேண்டும் என்றும், நேரடியாகப் பயன்பாட்டாளர்களே இறக்குமதி செய்ய அனுமதித்து ஒதுக்கீட்டு அளவை உயர்த்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது. அதேபோல, பால் கொள்முதல் விலையில் ஆவின் நிறுவனம் பசும் பாலுக்கு லிட்டருக்கு 35 ரூபாயும் எருமைப் பாலுக்கு 44 ரூபாயும் மட்டுமே வழங்கி வரும் நிலையில், அதை முறையே 55 ரூபாய் மற்றும் 68 ரூபாயாக உயர்த்த வேண்டும் எனப் பால் உற்பத்தியாளர்கள் கோருகின்றனர். மேலும், 2021-இல் நிறுத்தப்பட்ட 50 கிலோ தீவனப் பைகளுக்கான 250 ரூபாய் மானியத் திட்டத்தை மீண்டும் புதுப்பித்து, தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப பைக்கு 150 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை மானியம் வழங்கி ஆவின் கால்நடைத் தீவனத்தை விற்பனை செய்ய வலியுறுத்துகின்றனர். மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு இறக்குமதி வரி விலக்கு மற்றும் தீவன மானியங்களை வழங்காவிட்டால், சிறு மற்றும் குறு பால் உற்பத்தியாளர்கள் கால்நடைகளை விற்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு, மாநிலத்தின் பால் உற்பத்தியே கடுமையாகப் பாதிக்கப்படும்' என்றார்.

Nakkheeran14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

மூலம்: Nakkheeran
#business