PulseNews
வணிகம்

செங்கல்பட்டு பயணிகளுக்கு குட் நியூஸ்: மெட்ரோ ரயில் நீட்டிக்க திட்டம்; டெண்டர் கோரிய நிர்வாகம்

சென்னை மெட்ரோ ரயிலை பொறுத்தவரை 2 கட்டங்களாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. முதல் கட்டமாக விமான நிலையத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் வரையும், சென்ட்ரலில் இருந்து விம்கோ நகர் வரை பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. தற்போது இரண்டாம் கட்டமாக மாதவரம் - சிறுசேரி சிப்காட், மாதவரம் - சோலிங்க நல்லூர் மற்றும் பூத்தமல்லி - கலங்கரை விளக்கம் வரை 3 வழித்தடங்களுக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். மனைப்பிரிவு திட்டம்: 30 நாட்களுக்குள் அனுமதி... தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு இந்நிலையில், விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயிலை நீட்டிப்பு செய்வதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனை நீட்டிக்கும் விதமாக கிளாம்பாக்கத்தில் இருந்து செங்கல்பட்டு வரையிலான மெட்ரோ ரயில் திட்டத்திற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு ஒப்பந்தம் கோரி அறிவிப்பை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதேபோல் திட்டம் 5-ல் முதல் விம்கோ நகர் வரை மெட்ரோ ரயிலை நீட்டிப்பது தொடர்பாகவும், அதற்கான சாத்தியக் கூறு அறிக்கையை தயார் செய்வதற்கும் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. இந்த இரண்டு ஒப்பந்த புள்ளியும் கோரப்பட்டு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யும் பட்சத்தில் இந்த திட்டத்தின் ஒப்புதலுக்கு மத்திய அரசுக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வழக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The Indian Express14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
செங்கல்பட்டு பயணிகளுக்கு குட் நியூஸ்: மெட்ரோ ரயில் நீட்டிக்க திட்டம்; டெண்டர் கோரிய நிர்வாகம்

சென்னை மெட்ரோ ரயில் சேவையை விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் வழியாக செங்கல்பட்டு வரையிலும், விம்கோ நகர் வரையிலும் நீட்டிப்பதற்கான விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிக்க சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் டெண்டர் கோரியுள்ளது.

மூலம்: The Indian Express
#business