PulseNews
வணிகம்

ஆன்லைனில் மது வாங்க மக்களுக்குத் தயக்கமா...? டாஸ்மாக் விற்பனையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்...!

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் மதுபானக் கடைகளில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பதைத் தவிர்க்கும் நோக்கில், புதிய ஆன்லைன் முன்பதிவு வசதி கடந்த 7-ந்தேதி முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் வீடுகளுக்கே மதுபாட்டில்கள் கொண்டு வந்து வழங்கப்படுவதில்லை. மாறாக, இணையதளம் வழியாக தங்களுக்கு தேவையான மதுபாட்டில்களை முன்பதிவு செய்து, பின்னர் சம்பந்தப்பட்ட கடைகளில் நேரடியாக பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.புதிய நடைமுறையால் மதுபானக் கடைகளில் காத்திருக்கும் நேரம் குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தொடக்கத்திலேயே சில நடைமுறை சிக்கல்கள் எழுந்துள்ளதாக கடை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, முன்பதிவு தொடர்பான குழப்பங்கள் காரணமாக சில இடங்களில் மதுப்பிரியர்களுக்கும் கடை ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.ஆன்லைன் மதுவிற்பனை தொடங்கிய முதல் நாளில் ரூ.11.62 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் மட்டுமே முன்பதிவு செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. அதன்பின்னர் இரண்டாவது நாளில் சுமார் 3 ஆயிரம் முன்பதிவுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், ரூ.9 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் மட்டுமே ஆன்லைன் முறையில் விற்பனையாகியுள்ளன.இதற்கு மாறாக, அதே நாளில் மாநிலம் முழுவதும் உள்ள மதுபானக் கடைகளின் வழக்கமான மொத்த விற்பனை ரூ.162 கோடியே 37 லட்சமாக இருந்துள்ளது. இதனுடன் ஒப்பிடும்போது ஆன்லைன் வாயிலான விற்பனை ஒரு சதவீதத்தைக்கூட எட்டவில்லை.புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டு தொடக்க நாட்களே ஆனாலும், நேரடியாக கடைகளுக்குச் சென்று மதுபானங்களை வாங்குவதையே பெரும்பாலானோர் விரும்புகின்றனரா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், ஆன்லைன் முன்பதிவு நடைமுறை குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததும், தொடக்ககட்ட தொழில்நுட்ப மற்றும் செயல்முறை சிக்கல்களும் குறைந்த அளவிலான முன்பதிவுக்கு காரணமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Seithipunal14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
ஆன்லைனில் மது வாங்க மக்களுக்குத் தயக்கமா...? டாஸ்மாக் விற்பனையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்...!
PulseNews சுருக்கம்

டாஸ்மாக் கடைகளில் நீண்ட வரிசையைத் தவிர்க்க கடந்த 7-ம் தேதி முதல் ஆன்லைன் முன்பதிவு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் மதுப்பிரியர்கள் இணையத்தில் முன்பதிவு செய்துவிட்டு, பின்னர் நேரடியாகக் கடைகளுக்குச் சென்று மதுபாட்டில்களைப் பெற்றுக்கொள்ளலாம். ஆனால், இந்தத் திட்டத்தில் சில தொழில்நுட்பச் சிக்கல்கள் மற்றும் குழப்பங்கள் நிலவுவதால் ஊழியர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆன்லைன் முறையின் முதல் நாளில் 11.62 லட்சம் ரூபாய்க்கும், இரண்டாவது நாளில் 9 லட்சம் ரூபாய்க்கும் மட்டுமே விற்பனை நடந்துள்ளது. அதே சமயம், மாநிலம் முழுவதும் மதுக் கடைகளின் மொத்த விற்பனை 162.37 கோடி ரூபாயாக உள்ளது. இதன்படி ஆன்லைன் விற்பனை ஒரு சதவீதத்தைக் கூட எட்டவில்லை என்பதால், மக்கள் இப்போதும் நேரடியாகக் கடைகளுக்குச் சென்று மது வாங்கவே ஆர்வம் காட்டுவது உறுதியாகியுள்ளது.

மூலம்: SeithipunalSeithipunal-இல் முழு செய்தியைப் படிக்க →
#business