PulseNews
வணிகம்

4 நாள் ஏற்றத்திற்கு பின் சரிந்த தங்கம் விலை: இன்றைய விலை நிலவரம்

கடந்த 5-ஆம் தேதியிலிருந்து தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து 'டாப்' கியரில் எகிறி வந்தது. அன்றைய தினத்தில் மட்டுமே ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,240 உயர்ந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,11,720-க்கும், கிராமுக்கு ரூ.65 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,985-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், 4 நாட்கள் தொடர் ஏற்றத்திற்குப் பிறகு இன்று தங்கத்தின் விலை சற்று சரிவைக் கண்டுள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.1,11,600-க்கு விற்பனையாகிறது. அதேபோல கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.13,950-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையைப் பொறுத்தவரை இன்றைக்கும் எவ்வித மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.250-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்றைய தங்கம் விலை நிலவரம் தொடர்ந்து 4 நாட்கள் ஏற்றத்தைக் கண்ட தங்கம் விலை இன்று சரிவைச் சந்தித்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.1,11,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.13,950-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் ரூ.250-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.

The Indian Express13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
4 நாள் ஏற்றத்திற்கு பின் சரிந்த தங்கம் விலை: இன்றைய விலை நிலவரம்
PulseNews சுருக்கம்

கடந்த ஐந்தாம் தேதி முதல் தொடர்ந்து நான்கு நாட்களாக தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்து வந்தது. இந்த காலகட்டத்தில் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,240 வரை அதிகரித்த நிலையில், நேற்றைய தினம் சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.1,11,720-க்கும், கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.13,985-க்கும் விற்பனையானது.

தொடர் ஏற்றத்திற்குப் பிறகு இன்று தங்கத்தின் விலையில் சற்று சரிவு ஏற்பட்டுள்ளது. இதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.1,11,600-க்கும், கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.13,950-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம், வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி, ஒரு கிராம் ரூ.250-க்கும், ஒரு கிலோ ரூ.2,50,000-க்கும் விற்பனையாகிறது.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#business