110 நாட்களில் என்ன செய்ய முடியுமோ அதை த.வெ.க அரசு செய்துள்ளது: அமைச்சர் CTR நிர்மல்குமார் உறுதி
ஆட்சிப் பொறுப்பேற்ற 110 நாட்களில் என்ன செய்ய முடியுமோ அதை எல்லாம் த.வெ.க. அரசு செய்திருப்பதாகவும், ஒரு வருடத்தில் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றும், அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். மதுரை ஐராவதநல்லூர் பகுதியில் நடந்த கட்சி கூட்டத்தில் பேசிய அவர், மக்கள் பணத்தை யாரெல்லாம் திருடினார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறினார்.

த.வெ.க அரசு பொறுப்பேற்ற 110 நாட்களில் செய்யக்கூடிய அனைத்து பணிகளையும் செய்து முடித்துள்ளதாக அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். மதுரை ஐராவதநல்லூரில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அவர், ஓராண்டுக்குள் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் முழுமையாக நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்தார்.
மேலும், பொதுமக்களின் பணத்தை முறைகேடாகக் கையாடியவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.