PulseNews
வணிகம்

பிகிலுக்கு ஓட்டுப் போட்டுவிட்டு திகிலில் தவிக்கிறார்கள்: விலைவாசி உயர்வு குறித்து ஆர்.எஸ். பாரதி பேச்சு

தி.மு.க-வைப் பார்த்து பைல்ஸ் தயாராக உள்ளன என்று விஜய் பூச்சாண்டி காட்ட வேண்டாம் என்றும், ஆணவத்துடன் பேசினால் என்ன நடக்கும் என்பதற்கு மறைந்த ஜெயலலிதாவின் வரலாறே சாட்சி என்றும் வேலூரில் நடந்த நிகழ்ச்சியில் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கடுமையாகப் பேசியுள்ளார். வேலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ஆர்.எஸ். பாரதி, தி.மு.க.-வைப் பார்த்து விஜய் சவால் விடுகிறார். பைல்ஸ் எல்லாம் தயாராகத் டேபிளில் இருக்கின்றன, நான் அவிழ்த்தால் என்ன ஆகும் என்று சட்டசபையில் சொல்கிறார். அவிழ்ப்பதுதான் உன்னுடைய வேலை; இந்த பூச்சாண்டி காட்டுவதெல்லாம் எங்களிடம் வேண்டாம். தணிக்கை செய்யப்பட்டது என்று கூறுகிறார். ஒன்றும் தெரியாதவர்கள்தான் அமைச்சராகவும், எம்.எல்.ஏ.-வாகவும் இருக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் சிஏஜி (CAG) அறிக்கை தயாரிக்கப்பட்டு நாடாளுமன்றத்திலும், சட்டசபையிலும் தாக்கல் செய்யப்படுவது வழக்கமான நடைமுறை. அந்த சிஏஜி ரிப்போர்ட்தான் இந்த 3 பைல்ஸ் எந்தவொரு சி.ஏ.ஜி அறிக்கையும் அரசாங்கத்தைப் பாராட்டியிருக்காது. ஆடிட் என்பது மாநகராட்சி முதல் அரசாங்கம் வரை அனைத்துத் தளங்களிலும் வழக்கமாக நடக்கக் கூடியது. ஆனால், ஊடகங்களும் பத்திரிகைகளும் உடனே 3 பைல்கள் இருக்கின்றன என்று பரபரப்பாக்குகின்றன. நான் திருவொற்றியூர் கூட்டத்திலேயே தைரியமாகச் சொன்னேன்: 'நீ அவிழ்க்கப் போவது 3 பைல்ஸ் என்றால், நான் அவிழ்ப்பது 3. நான் மிகவும் மோசமான ஆள்'. இப்படித்தான் முதன்முதலில் ஜெயலலிதா என்னிடம் வாலட்டினார். அதன் விளைவு என்ன என்பதை அந்த அம்மா உயிரோடு இருந்தால் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். அன்று அவரும் இதேபோல்தான் ஆணவமாகப் பேசினார். அன்னைக்கு ஜெயலலிதா பெரிய தப்பு எதுவும் செய்யவில்லை; டான்சி நிலத்தை வாங்கினார். அரசு நிலத்தை வாங்கக் கூடாது. நான் டான்சி நிலத்தை வாங்கியது தவறு என அறிக்கை கொடுத்தபோது, சட்டசபையில் தி.மு.க-வுக்கு ஒரு எம்.எல்.ஏ. கூட கிடையாது. 'கண்ணுக்கு எட்டிய வரை எதிரிகளே இல்லை' என்று ஜெயலலிதா சொன்னார். அப்போது தி.மு.க-வில் 3 பேர்தான் வெற்றி பெற்றார்கள்; கலைஞர் ராஜினாமா செய்துவிட்டதால் இருவர் மட்டுமே அவைக்குச் சென்றார்கள். அந்த தைரியத்தில், 'நான் டான்சி நிலத்தை வாங்கினேன், வாங்கினால் என்ன தப்பு?' என்று அவர் பேசினார். 'வாம்மா மாட்டினியா நீ' என்று நாம் போட்ட வழக்கு உச்சநீதிமன்றம் வரை சென்று அவர் சிறைக்கு சென்றார். எந்த கொழுப்பு வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் வாய்க் கொழுப்பு மட்டும் இருக்கக் கூடாது. அந்த நிலம் எனக்கு வேண்டாம் என்று திருப்பித் தந்திருந்தால் அன்றே அந்தப் பிரச்னை முடிந்திருக்கும். பிகிலுக்கு ஓட்டுப் போட்டீர்கள்... இப்போது திகில் திகில் என விலைவாசி ஏறுகிறது. இன்றைக்கு மக்களுக்கு இது தெரியாது; இன்னும் 6 மாதம் ஆகட்டும். இதே மக்கள் வந்து துரைமுருகனின் வீட்டு வாசலில் நின்று, 'காவல் தெய்வமே. நீங்கதான் எங்களைக் காப்பாற்ற வேண்டும்' என்று கையேந்தி நிற்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்று பேசினார்.

The Indian Express14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
பிகிலுக்கு ஓட்டுப் போட்டுவிட்டு திகிலில் தவிக்கிறார்கள்: விலைவாசி உயர்வு குறித்து ஆர்.எஸ். பாரதி பேச்சு
PulseNews சுருக்கம்

வேலூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, நடிகர் விஜய் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தி.மு.க-வை பார்த்து பைல்கள் தயாராக இருப்பதாக விஜய் மிரட்ட வேண்டாம் என்றும், ஆணவத்துடன் செயல்பட்டால் என்னவாகும் என்பதற்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வரலாறே சாட்சி என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

சட்டப்பேரவையில் தன்னிடம் பைல்கள் தயாராக இருப்பதாக விஜய் கூறுவது சவால் விடுவதைப் போல உள்ளது என்று ஆர்.எஸ். பாரதி குறிப்பிட்டார். மக்கள் 'பிகில்' படத்திற்கு ஓட்டு போட்டுவிட்டு, தற்போது விலைவாசி உயர்வால் அச்சத்தில் தவித்து வருவதாகவும் அவர் அந்த உரையில் விமர்சித்துள்ளார்.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#business