விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரிக்கை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பிரச்சார இயக்கம் துவக்கம்
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவேண்டும், வேலை வாய்ப்பு உருவாக்கிட வேண்டும் குடிமனை பட்டா வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தழுவிய பிரச்சார இயக்கம் திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக ஆகஸ்ட் 26-ந் தேதியில் இருந்து 31-ந் தேதி வரை மக்களை வீடுகள்தோறும், வீதிகள் தோறும் சந்தித்து பிரச்சாரம் செய்து, அந்தந்த பகுதி மக்களுடைய குறைபாடுகளை கண்டறிவது என்ற அடிப்படையில் தமிழகம் முழுவதும் நடக்கக்கூடிய பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் தொழிற்சங்க கிளைகளின் சார்பாக பிரச்சாரம் நேற்று நடைபெற்றது. இந்த பிரச்சாரத்திற்கு சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.ரெங்கராஜன் தலைமை தாங்கினார். இந்த பிரச்சாரத்தில் பொன்மலை சிபிஎம் பகுதி செயலாளர் விஜயேந்திரன், போக்குவரத்து சங்கத்தின் மாநில தலைவர் எஸ். அருள்தால், அருண் மாணிக்கம், மருந்து விற்பனை பிரதி சங்கத்தின் தலைவர் அருண் இனியன், ஓய்வு பெற்றோர் சங்கத் தலைவர் சீனிவாசன், மாற்றுத்திறனாளி சங்கத் தலைவர் சேகர் மற்றும் தொழிற்சங்க அரங்கத் தோழர்கள் சிபிம் மாவட்ட குழு உறுப்பினர் ஜோன்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். க.சண்முகவடிவேல்

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும், வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் மற்றும் குடிமனைப் பட்டாக்களை வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநில அளவிலான பிரச்சார இயக்கம் திருச்சியின் சுப்பிரமணியபுரம் பகுதியில் தொடங்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 26 முதல் 31-ம் தேதி வரை நடைபெறும் இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக, அக்கட்சியினர் வீடு வீடாகச் சென்று பொதுமக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறியும் பணிகளில் ஈடுபட உள்ளனர். தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்படும் இப்பிரச்சாரம் மூலம் மக்களின் பிரச்சினைகளை அறிந்துகொண்டு அவற்றை முன்னிறுத்த கட்சி திட்டமிட்டுள்ளது.