PulseNews
வணிகம்

ஒரே நாளில் ரூ.2,360 சரிவு... தங்கம் விலை இன்று எவ்வளவு தெரியுமா...?

தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்தை சந்தித்து வந்த நிலையில், இன்று சென்னையில் தங்கம் விலை திடீரென சரிந்துள்ளது. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,360 குறைந்ததால், நகை வாங்க திட்டமிட்டுள்ள பொதுமக்கள் மத்தியில் இந்த விலை மாற்றம் கவனம் பெற்றுள்ளது. சென்னையில் நேற்று முன்தினம் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.14,725-க்கும், ஒரு சவரன் ரூ.1,17,800-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று காலை தங்கத்தின் விலை மேலும் குறைந்தது. கிராமுக்கு ரூ.75 குறைந்து ரூ.14,650-க்கும், சவரனுக்கு ரூ.600 குறைந்து ரூ.1,17,200-க்கும் விற்பனையானது. ஆனால், மாலையில் தங்கம் விலை மீண்டும் உயர்ந்து அதிர்ச்சி அளித்தது. கிராமுக்கு ரூ.150 அதிகரித்து ரூ.14,800-க்கும், சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்து ரூ.1,18,400-க்கும் விற்பனை செய்யப்பட்டது.நேற்று மாலை உயர்ந்த தங்கம் விலை, இன்று எதிர்பாராத வகையில் மீண்டும் சரிந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,360 குறைந்து ரூ.1,16,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது.ஒரு கிராம் தங்கத்தின் விலையும் ரூ.295 குறைந்து ரூ.14,505-க்கு விற்பனை செய்யப்படுகிறது.தங்கத்தின் விலை மட்டுமின்றி வெள்ளி விலையிலும் இன்று சரிவு ஏற்பட்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து ரூ.260-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.5 ஆயிரம் குறைந்து ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.தங்கம், வெள்ளி என இரு விலைமதிப்புமிக்க உலோகங்களின் விலையும் ஒரே நாளில் குறைந்திருப்பது, வாங்கும் முடிவில் இருப்பவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Seithipunal15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
ஒரே நாளில் ரூ.2,360 சரிவு... தங்கம் விலை இன்று எவ்வளவு தெரியுமா...?
PulseNews சுருக்கம்

சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட நிலையில், இன்று திடீரென கணிசமான சரிவைச் சந்தித்துள்ளது. ஒரே நாளில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.2,360 குறைந்துள்ளதால், நகை வாங்கக் காத்திருக்கும் மக்களிடையே இந்த விலை மாற்றம் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

முன்னதாக சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ.14,725-க்கும், ஒரு சவரன் ரூ.1,17,800-க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், நேற்று காலை மீண்டும் விலை குறைந்தது. அதன்படி, ஒரு கிராம் ரூ.75 குறைந்து ரூ.14,650-க்கும், ஒரு சவரன் ரூ.600 குறைந்து ரூ.1,17,200-க்கும் விற்பனையானது.

மூலம்: SeithipunalSeithipunal-இல் முழு செய்தியைப் படிக்க →
#business