மீண்டும் கூடிய சட்டசபை: ஒரே செல்போனில் மாறி மாறி பேசிய அக்ரி கிருஷ்ண மூர்த்தி, சேகர் பாபு
தமிழக சட்டப்பேரவை கூட்டம் கடந்த 5-ம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் 2026-27ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 6-ம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து கடந்த 7, 10, 11 ஆகிய தேதிகளில் 3 நாட்கள், பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. 12-ம் தேதி 2026-27ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு நிதி அமைச்சர் மரிய வில்சன், வேளாண் அமைச்சர் வினோத் ஆகியோர் பதில் அளித்தனர். இங்க போனா அதிர்ஷ்டம் கொட்டோ கொட்டுனு கொட்டும்: சுற்றுலாப் பயணிகளின் ஒத்த தப்பு; மொத்தத்தையும் காலி பண்ணிடுச்சி கடந்த 17-ம் தேதி முதல் துறை வாரியாக மானியக்கோரிக்கை மீதான விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இறுதியாக 28-ம் தேதி அன்று வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. விவாதத்திற்கு பதில் அளித்து அமைச்சர் ராஜ்குமார் அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் பிறகு 29-ம் தேதி சனிக்கிழமை, 30-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்று 2 நாட்கள் சட்டப்பேரவைக்கு விடுமுறை விடப்பட்டது. 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று காலை 9.30 மணிக்கு மீண்டும் சட்டப்பேரவை கூடியது. இன்றைய தினம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. இந்நிலையில், சட்டசபைக்கு பல கட்சித் தலைவர்கள் வருகை தந்தனர். அப்போது அ.தி.மு.க கொறடா அக்ரி கிருஷ்ண மூர்த்தியும், தி.மு.க எம்.எல்.ஏ சேகர் பாபுவும் ஒரே செல்போனில் மாறி மாறி தீவிரமாக பேசிக் கொண்டு வந்தனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் அப்படி என்ன தான் இருவரும் பேசி இருப்பார்கள் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் கடந்த 5-ம் தேதி தொடங்கி, அன்று பொது பட்ஜெட்டும், 6-ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து, 7, 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரு பட்ஜெட்டுகள் மீதான விவாதங்கள் நடைபெற்றன.
கடந்த 12-ம் தேதி நடந்த விவாதத்திற்கு நிதி அமைச்சர் மரிய வில்சன் மற்றும் வேளாண் அமைச்சர் வினோத் ஆகியோர் பதிலளித்தனர். இதற்கிடையே, சட்டப்பேரவை மீண்டும் கூடிய நிலையில், அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் சேகர் பாபு ஆகியோர் ஒரே செல்போனைப் பகிர்ந்து மாறி மாறிப் பேசியது குறிப்பிடத்தக்கது.