PulseNews
உலகம்

இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்ச கைது

இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் மூத்த மகனும், இலங்கை பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் இன்று கைது செ…

PulseNews ஆசிரியர் குழு36 நிமிடம் முன் · புதுப்பிக்கப்பட்டது
இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்ச கைது

இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் மூத்த மகனும், இலங்கை பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

2013-ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக ஏர்பஸ் விமானங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் பல மில்லியன் ரூபாய் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் வழக்கின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக்காக இன்று காலை ஆணைக்குழுவில் ஆஜரான நாமல் ராஜபக்சவிடம் சுமார் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணை நடவடிக்கைகள் நிறைவடைந்த நிலையில், ஊழல் தடுப்புப் பிரிவினரால் அவர் அதிகாரப்பூர்வமாகக் கைது செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

#world#editorial