Uber, Ola நிறுவனங்களுக்கு செக்!சொந்த ஆப் களமிறக்கும் தமிழக அரசு? முழு விவரம் இதோ..

Tamil Nadu government auto app: தமிழ்நாட்டில் ஆட்டோ கட்டணம் கடைசியாக மாற்றியமைக்கப்பட்டு 13 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், கட்டணத்தை உயர்த்துவது தொடர்பான முக்கிய முடிவுகளை எதிர்நோக்கி ஆட்டோ ஓட்டுநர் தொழிற்சங்கங்கள் காத்திருக்கின்றன. இது தொடர்பாகப் போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டங்கள், ஓட்டுநர்களின் பல ஆண்டு கோரிக்கைக்கு ஒரு சுமுகமான தீர்வைக் கொடுக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

13 ஆண்டு கால காத்திருப்பும் ஓட்டுநர்களின் கோரிக்கைகளும்

கடந்த 2013-ஆம் ஆண்டிற்குப் பிறகு தமிழ்நாட்டில் ஆட்டோ கட்டணம் உயர்த்தப்படவே இல்லை. இந்த இடைப்பட்ட காலத்தில் எரிபொருள் விலை, வாகனப் பராமரிப்புச் செலவுகள், காப்பீடு கட்டணம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கணிசமாக உயர்ந்துவிட்டதாகத் தொழிற்சங்கங்கள் தொடர்ந்து பல்வேறு கட்ட கோரிக்கைகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் அனைத்து முக்கிய ஆட்டோ தொழிற்சங்கங்களும் ஒருங்கிணைந்து, முதல் 1.5 கிலோமீட்டருக்குக் குறைந்தபட்சக் கட்டணமாக ரூ.60 நிர்ணயிக்க வேண்டும் என்றும், அதற்கு அடுத்த ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ரூ.30 வசூலிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் அரசிடம் கூட்டாகக் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், காத்திருப்புச் கட்டணமாக நிமிடத்திற்கு 1 ரூபாயும், இரவு நேரப் பயணங்களுக்கு வழக்கமான கட்டணத்தில் இருந்து 1.5 மடங்கு கூடுதல் கட்டணமும் நிர்ணயிக்க வேண்டும் என ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

பைக் டாக்ஸி கட்டுப்பாடுகள் மற்றும் சுய ஆப் கோரிக்கை

கட்டண உயர்வு மட்டுமன்றி, சட்டவிரோதமாக இயங்கும் பைக் டாக்ஸிகளால் தங்கள் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படுவதாக ஆட்டோ ஓட்டுநர்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஒரு சில இடங்களில் பைக் டாக்சி ஓட்டுநர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இடையே, வாக்குவாதம் மற்றும் சண்டைகளும் ஏற்பட்டு வருகின்றன.

பயணிகள் பாதுகாப்பு மற்றும் முறையான உரிமங்கள் இல்லாத சூழலில், பைக் டாக்ஸி சேவைகளுக்குத் தடை விதிக்க வேண்டும் அல்லது உரிய விதிமுறைகளுக்கு உட்பட்டு அவற்றை முறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் இருந்து வருகிறது. அத்துடன், தனியார் செயலி நிறுவனங்களின் அதிகப்படியான கமிஷன் பிடிப்பதைக் தவிர்க்கும் வகையில், தமிழக அரசே பிரத்யேகமாக ஆட்டோ செயலியை (Government-backed Auto App) அறிமுகப்படுத்த வேண்டும் என்றும், இதன் மூலம் வெளிப்படையான மீட்டர் கட்டண முறையில் இயங்கத் தயார் என்றும் ஓட்டுநர்கள் அரசிடம் உறுதியளித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசின் நடவடிக்கை மற்றும் வாழ்வாதார எதிர்பார்ப்பு

போக்குவரத்துத் துறை நடத்திய ஆலோசனைக் கூட்டங்களில், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தங்கள் பணி நேரம், தினசரி வருமானம், பராமரிப்புச் செலவுகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் விரிவாகச் சமர்ப்பித்துள்ளனர். மாநிலம் முழுவதும் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஆட்டோ தொழிலையே முழுமையாக நம்பி வாழ்கின்றன.

முதலமைச்சரின் கவனத்திற்கு இச்சிக்கல் கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே இதுகுறித்த சாதகமான அறிவிப்பு வெளியாகும் என்ற நம்பிக்கையில் ஆட்டோ ஓட்டுநர்கள் காத்திருப்பதாக தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். அரசால் முறையான மீட்டர் கட்டணம் அறிவிக்கப்பட்டு, அது சரியாகக் கண்காணிக்கப்பட்டால் பொதுமக்களுக்கும் ஓட்டுநர்களுக்கும் இடையே சுமுகமான சூழல் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பு வெளியாகினால், ஆட்டோ ஓட்டுநர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் ஆட்டோ கட்டணங்கள் மாற்றியமைக்கப்பட்டு 13 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், கட்டண உயர்வை அமல்படுத்துவது குறித்து ஆட்டோ ஓட்டுநர் தொழிற்சங்கங்கள் முக்கிய முடிவுகளை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன.
இதன் ஒரு பகுதியாக போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டங்கள், ஓட்டுநர்களின் நீண்டகால கோரிக்கைகளுக்குச் சாதகமான தீர்வை வழங்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனிடையே, ஊபர் மற்றும் ஓலா நிறுவனங்களுக்குப் போட்டியாகத் தமிழக அரசு தனியாகச் சொந்தமாக ஆட்டோ செயலியை உருவாக்கத் திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.