டாடா டியாகோவிற்கு போட்டியாக களமிறங்கும் மாருதியின் மலிவு விலை மின்சார கார்
இந்திய மின்சார வாகன சந்தையில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட மாருதி சுஸுகி நிறுவனம் புதிய மின்சார காரை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. 'eSKY' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கார், சுமார் 10 லட்சம் ரூபாய்க்கு…
இந்திய மின்சார வாகன சந்தையில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட மாருதி சுஸுகி நிறுவனம் புதிய மின்சார காரை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. 'eSKY' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கார், சுமார் 10 லட்சம் ரூபாய்க்கும் குறைவான பட்ஜெட்டில் வெகுஜன சந்தையை இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டு வருகிறது.
ஒருமுறை சார்ஜ் செய்தால் 310 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்கக்கூடிய வகையில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. மாருதி சுஸுகியின் மின்சார வாகன வரிசையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இ-விட்டாரா (eVX) காருக்குக் கீழ் இந்த புதிய மாடல் நிலைநிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்தியாவில் மலிவு விலை மின்சார கார்களின் சந்தையில் டாடா டியாகோ இவி மற்றும் எம்.ஜி கோமட் ஆகிய நிறுவனங்கள் முன்னிலை வகிக்கின்றன. மாருதியின் இந்த புதிய வரவு, அந்த நிறுவனங்களுக்குப் பெரும் சவாலாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.