இன்று முழு சூரிய கிரகணம்: இந்தியாவில் பார்க்க முடியுமா? தேதி, நேரம் என்ன?
Surya Grahan 2026 Timing in India: ஆக.12, புதன்கிழமை அன்று அரிதான முழு சூரிய கிரகணம் நிகழவுள்ளது. நிலவு, பூமிக்கும் சூரியனுக்கும் இடையே கடந்து செல்லும்போது, அதன் நிழல் சூரியனை முழுமையாக மறைப்பதால் ‘முழு சூரிய கிரகணம்’ ஏற்படுகிறது. நாசாவின் (NASA) கூற்றுப்படி, இந்த சூரிய கிரகணம் கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, வடக்கு ரஷ்யா, அட்லாண்டிக் பெருங்கடல், ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலின் சிறிய பகுதி ஆகியவற்றின் வழியாகக் கடந்து செல்லும். இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க வட அமெரிக்காவின் சில பகுதிகள், கனடாவின் பெரும்பாலான பகுதிகள், ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகள், வடமேற்கு ஆப்ரிக்கா உள்ளிட்ட வட அரைக்கோளத்தின் பல இடங்களில் பகுதி சூரிய கிரகணத்தைக் காண முடியும். இந்திய திட்ட நேரத்தின்படி (IST), இந்த சூரிய கிரகணம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி இரவில் தொடங்கி, ஆகஸ்ட் 13 ஆம் தேதி அதிகாலையில் நிறைவடையும். ‘டைம் அண்ட் டேட்’ (Time and Date) தகவலின்படி, உலகளாவிய கட்டங்களின் நேரங்கள் (இந்திய நேரம்) பகுதி சூரிய கிரகணம் ஆகஸ்ட் 12, இரவு 9:04 மணிக்கு தொடங்குகிறது. முழு சூரிய கிரகணம் இரவு 10:28 மணிக்கும், உச்சக்கட்ட கிரகணம் (Maximum eclipse) இரவு 11:16 மணிக்கும் தொடங்குகிறது. முழு சூரிய கிரகணத்தின் முடிவு ஆகஸ்ட் 13, நள்ளிரவு 12:04 மணிக்கும், பகுதி சூரிய கிரகணத்தின் முடிவு அதிகாலை 1:28 மணிக்கும் முடிவடைகிறது. இவை உலகளவில் கிரகணத்தின் நிலைகள் தொடங்கும் மற்றும் முடியும் நேரங்கள் ஆகும். இவை இந்தியாவில் பார்க்கும் நேரங்கள் அல்ல. இந்தியாவில் இதைப் பார்க்க முடியுமா? இல்லை, ஆக.12 அன்று நிகழும் இந்த முழு சூரிய கிரகணத்தை இந்தியாவில் பார்க்க முடியாது. இந்தியா, முழு கிரகணம் மற்றும் பகுதி கிரகணம் தென்படும் பாதைகளுக்கு வெளியே அமைந்திருப்பதே இதற்கு முக்கியக் காரணமாகும். மேலும், இந்த கிரகணம் இந்தியாவில் இரவு நேரத்தில் நிகழ்கிறது. அப்போது சூரியன் அடிவானத்திற்கு கீழே இருக்கும் என்பதால், இந்தியாவில் உள்ள மக்களால் இந்த 'சூரிய கிரகணத்தை' நேரடியாகக் காண முடியாது. எங்கு தெளிவாகப் பார்க்கலாம்? வடக்கு ரஷ்யாவின் தொலைதூர பகுதி வழியாகத் தொடங்கும் முழு கிரகணப் பாதை, பின்னர் கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, வட அட்லாண்டிக் கடலைக் கடந்து ஸ்பெயின் மற்றும் வடமேற்கு போர்ச்சுகலின் ஒரு சிறிய பகுதியைச் சென்றடையும். ரஷ்யாவில் நண்பகல் வேளையில் முழு கிரகணம் நிகழும். கிரீன்லாந்து & ஐஸ்லாந்தில் பிற்பகல் அல்லது மாலை வேளையில் நிகழும். ஸ்பெயின் & போர்ச்சுகலில் சூரிய அஸ்தமனத்திற்கு சற்று முன்பு இதைக் காணலாம். ஐஸ்லாந்தின் 'ரேக்யவிக்' (Reykjavík) மற்றும் ஸ்பெயினின் 'லியோன்', 'வலென்சியா', 'சரகோசா' ஆகிய நகரங்கள் முழு கிரகணப் பாதையில் அமைகின்றன. நாசாவின் கூற்றுப்படி, ரேக்யவிக்கில் உள்ளூர் நேரப்படி மாலை 5:48 முதல் 5:49 மணி வரையிலும்; லியோனில் இரவு 8:28 முதல் 8:30 மணி வரையிலும்; வலென்சியாவில் இரவு 8:32 முதல் 8:33 மணி வரையிலும் முழு கிரகணம் தென்படும். பெரும்பாலான இடங்களில் முழு சூரிய மறைப்பு 2 நிமிடங்களுக்கும் குறைவாகவே நீடிக்கும். 1999-க்குப் பிறகு ஐரோப்பாவில் முதன்முறை 1999 ஆம் ஆண்டிற்குப் பிறகு ஐரோப்பாவில் தென்படும் முதல் ‘முழு சூரிய கிரகணம்’ இதுவே ஆகும். நிலவு சூரியனை முழுமையாக மறைக்கும் சில நிமிடங்களில், பகல் வெளிச்சம் சட்டென்று அந்திப் பொழுதாக மாறும். அப்போது சூரியனின் வெளிப்புற வளிமண்டலமான 'கொரோனா' வெளிப்படும். பிரிட்டனில் முழு கிரகணம் தென்படாது என்றாலும், 90% அதிகமான சூரியன் மறைக்கப்படும் மிகப்பெரிய 'பகுதி கிரகணத்தை' அங்கு காண முடியும். லண்டன் & எடின்பர்க்கில் 91%, கார்டிஃப், பெல்ஃபாஸ்ட்டில் 93%, பிளைமவுத்தில் 95% வரை சூரியன் மறைக்கப்படும். கிரகணத்தை எவ்வாறு பார்ப்பது? சூரிய கிரகணத்தின்போது சூரியனை ஒருபோதும் வெறும் கண்ணால் நேரடியாகப் பார்க்கக் கூடாது. சாதாரண கூலிங் கிளாஸ்கள் (Sunglasses) கண் பார்வைக்கு போதுமான பாதுகாப்பை வழங்காது; அவை நிரந்தர கண் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். ISO 12312-2 சர்வதேச பாதுகாப்புத் தரச் சான்றிதழ் பெற்ற கிரகணக் கண்ணாடிகள் (Eclipse glasses) சூரிய ஒளிப் பார்வையாளர்களைப் (Solar viewers) பயன்படுத்த வேண்டும். பழைய கண்ணாடிகளைப் பயன்படுத்துவதற்கு முன்பு அவற்றில் கீறல்கள், துளைகள் அல்லது சுருக்கங்கள் உள்ளனவா என்று பரிசோதிக்க வேண்டும். கேமராக்கள், பைனாகுலர்கள் மற்றும் தொலைநோக்கிகளில் சிறப்பு 'சோலார் ஃபில்டர்களை' பொருத்த வேண்டும். முறையான ஃபில்டர்கள் இல்லாமல் அவற்றின் வழியாகச் சூரியனைப் பார்த்தால் தீவிர கண் பாதிப்பு ஏற்படும். கிரகணக் கண்ணாடிகள் இல்லாதவர்கள், 'பின்ஹோல் ப்ரொஜெக்டர்' (Pinhole projector) போன்ற மறைமுகப் பார்வையிடும் முறைகளைப் பயன்படுத்தலாம்.

ஆகஸ்ட் 12, புதன்கிழமை அன்று அரிதான முழு சூரிய கிரகணம் நிகழ உள்ளது. நிலவு, பூமிக்கும் சூரியனுக்கும் இடையே கடந்து செல்லும் போது அதன் நிழல் சூரியனை முழுமையாக மறைப்பதால் இந்த நிகழ்வு ஏற்படுகிறது.
நாசாவின் தகவல்படி, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, வடக்கு ரஷ்யா, அட்லாண்டிக் பெருங்கடல், ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலின் சில பகுதிகளில் இந்த கிரகணத்தைக் காண முடியும். இந்த முழு சூரிய கிரகணத்தை இந்தியாவில் பார்க்க முடியுமா என்பது குறித்த தகவல் இதில் குறிப்பிடப்படவில்லை.