Aadhaar Card: ஆதார் அட்டையை வீட்டில் மறந்துவிட்டீர்களா? வாட்ஸ்அப்பிலேயே சில நிமிடங்களில் பதிவிறக்கம் செய்யலாம்.. எப்படி?
ஆதார் அட்டையை வீட்டில் மறந்துவிட்டால், அரசின் மை கவ் உதவிச் சேவை மூலம் வாட்ஸ்அப்பிலேயே எளிதாகப் பெறலாம். +91-9013151515 என்ற எண்ணுக்கு செய்தி அனுப்பி, டிஜிலாக்கர் சேவையைத் தேர்ந்தெடுத்து, ஆதார் எண் மற்றும் OTP மூலம் சரிபார்த்து உங்கள் ஆதார் அட்டையை மின்னணு வடிவில் பதிவிறக்கம் செய்யலாம்.

ஆதார் அட்டையை வீட்டிலேயே மறந்துவிட்டு வருபவர்களுக்கு, அரசு வழங்கும் 'மை கவ்' (MyGov) உதவிச் சேவை மூலம் வாட்ஸ்அப் வழியாகவே அதனை எளிதாகப் பெற்றுக்கொள்ளும் வசதி உள்ளது. இதற்கு உங்கள் வாட்ஸ்அப்பில் இருந்து +91-9013151515 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்ப வேண்டும்.
அங்கு வழங்கப்படும் டிஜிலாக்கர் (DigiLocker) சேவையைத் தேர்வு செய்து, உங்களது ஆதார் எண் மற்றும் மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபி (OTP) மூலம் சரிபார்ப்பை முடிக்க வேண்டும். இந்தச் செயல்முறை முடிந்ததும், உங்களது ஆதார் அட்டையை மின்னணு வடிவில் சில நிமிடங்களிலேயே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.