நிலவில் ஒரு ஏக்கர் ரூ.1,700 தானா? பட்டா போட்ட இந்திய பிரபலங்கள்; மூனை விற்ற நபர்
1980-ஆம் ஆண்டில் டென்னிஸ் ஹோப் என்ற நபர், சர்வதேச விண்வெளிச் சட்டத்தில் இருந்த ஒரு முக்கியச் சட்ட ஓட்டையைக் கண்டறிந்தார். அதாவது, ஐ.நா-வின் விண்வெளி ஒப்பந்தப்படி, உலக நாடுகள் எதுவும் நிலவைச் சொந்தம் கொண்டாட முடியாது. ஆனால், "ஒரு தனிநபர் நிலவைச் சொந்தமாக்கக் கூடாது" என்று சட்டத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. இதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட டென்னிஸ் ஹோப், 'லூனார் எம்பஸி' (Lunar Embassy) என்ற அமைப்பைத் தொடங்கி, நிலவின் பகுதிகளைப் பட்டா போட்டு விற்பனை செய்யத் தொடங்கினார். பாஸ்போர்ட் இல்லையா? பரவாயில்லை; சொந்த நாட்டிற்கு திரும்பலாம்... அகதிகளுக்கு இலங்கை அரசின் முக்கிய அறிவிப்பு நிலவில் ஒரு ஏக்கர் நிலத்தின் விலை எவ்வளவு? இன்று நிலவில் நிலம் வாங்குவது பலருக்கும் ஒரு சுவாரஸ்யமான பொழுதுபோக்காகவும், விசித்திரமான பரிசளிப்பு முறையாகவும் மாறியுள்ளது. நிலவில் 1 ஏக்கர் நிலத்தின் விலை 20 டாலர் முதல் 40 டாலர் வரை தான். இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,700 முதல் ரூ.3,400 வரை மட்டுமே ஆகும். பங்குச் சந்தையைப் போலவே நிலவின் பகுதிகளுக்கும் தேவைக்கேற்ப விலை மாறுபடும். உதாரணத்திற்கு, மனிதன் முதன்முதலில் காலடி வைத்த 'சீ ஆஃப் டிரான்குவிலிட்டி' (Sea of Tranquility) போன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளுக்குக் கிராக்கி அதிகம். மொத்தமாக பல ஏக்கர்களை வாங்குபவர்களுக்குச் சில இணையதளங்கள் சிறப்புத் தள்ளுபடிகளையும் வழங்குகின்றன. நிலவில் மனை வாங்கிய பிரபலங்கள் யார் யார்? பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானுக்கு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு பெண் ரசிகை, ஒவ்வொரு ஆண்டும் அவர் பிறந்தநாளின் போது நிலவில் நிலம் வாங்கிப் பரிசளித்து வருகிறார். நிலவின் 'Sea of Tranquility' பகுதியில் இவருக்கு நிலம் உள்ளதுடன், அங்குள்ள ஒரு பள்ளத்திற்கு ஷாருக்கானின் பெயரும் சூட்டப்பட்டுள்ளது. விண்வெளி அறிவியலில் அதிக ஆர்வம் கொண்ட மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், நிலவின் 'மரே முஸ் கோவியன்ஸ்' (Sea of Muscovy) என்ற பகுதியில் சொந்தமாக நிலம் வாங்கியிருந்தார். ஹாலிவுட் நட்சத்திரங்கள் சாகச நாயகன் டாம் குரூஸ், ஆஸ்கர் நாயகி நிகோல் கிட்மேன் மற்றும் நடிகர் ஜான் ட்ரவோல்டா ஆகியோரும் நிலவில் நிலம் வாங்கியுள்ளனர். அதுமட்டுமல்லாமல், அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ. புஷ் மற்றும் பிரபல பத்திரிகையாளர் பார்பரா வால்டர்ஸ் போன்றவர்களும் நிலவில் நிலம் வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலப் பட்டா செல்லுபடியாகுமா? இதுதான் இங்குள்ள மிக முக்கியமான கேள்வி. சர்வதேச விண்வெளிச் சட்டத்தின்படி, விண்வெளியில் உள்ள எந்தவொரு கோளையும் அல்லது நிலவையும் எந்தவொரு தனிநபரோ அல்லது அரசோ முறைப்படி சொந்தம் கொண்டாட முடியாது. எனவே, இந்த நிலப் பட்டாக்கள் சட்டப்பூர்வமான ரியல் எஸ்டேட் ஆவணம் அல்ல. இவை வெறும் அடையாளப்பூர்வமான பரிசாகவும், விண்வெளி மீதான மனிதனின் பேரார்வத்தின் வெளிப்பாடாகவும் மட்டுமே பார்க்கப்படுகின்றன.

1980-ஆம் ஆண்டில் டென்னிஸ் ஹோப் என்பவர் சர்வதேச விண்வெளிச் சட்டத்தில் இருந்த ஓட்டையைப் பயன்படுத்தி நிலவை விற்பனை செய்யத் தொடங்கினார். ஐ.நா. ஒப்பந்தப்படி நாடுகள் நிலவைச் சொந்தமாக்க முடியாது என்றாலும், தனிநபர்கள் நிலவைச் சொந்தமாக்கக் கூடாது என்று எந்த விதியும் இல்லாததை அவர் தனக்குச் சாதகமாக மாற்றிக்கொண்டார்.
இதற்காக 'லூனார் எம்பஸி' என்ற அமைப்பை உருவாக்கிய அவர், நிலவின் பகுதிகளைப் பட்டா போட்டு விற்பனை செய்ய ஆரம்பித்தார். இதன் மூலம் நிலவில் ஒரு ஏக்கர் நிலம் ரூ.1,700 என்ற விலையில் விற்கப்பட்ட நிலையில், பல இந்தியப் பிரபலங்களும் இந்த நிலங்களை வாங்கியுள்ளனர்.