PulseNews
தொழில்நுட்பம்

8,000 வாட்ச் அவர்ஸ், 20 மில்லியன் ஷாட்ஸ் வியூஸ் கட்டாயம்: பிப்.1 முதல் அமலுக்கு வரும் யூடியூப்பின் புதிய விதிகள்

யூடியூப்பில் வீடியோக்களைப் பதிவேற்றி வருமானம் ஈட்டும் படைப்பாளிகளுக்கு அதிர்ச்சி கலந்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. யூடியூப் நிறுவனம் தனது யூடியூப் பாட்னர் ப்ரோகிராம் தகுதி விதிகளில் மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. பிப்ரவரி 1, 2027 முதல் நடைமுறைக்கு வரவுள்ள இந்த புதிய விதிகளின்படி, யூடியூப்பில் விளம்பரங்கள் மற்றும் பிரீமியம் மூலம் பணம் சம்பாதிக்க நினைக்கும் புதிய படைப்பாளிகள் எட்ட வேண்டிய இலக்குகள் இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளன. அதை பற்றி பார்போம். நீள வீடியோக்கலில் கடந்த ஓராண்டில் (365 நாட்கள்) குறைந்தபட்சம் 8,000 மணிநேரப் பார்வைகள் பெற்றிருக்க வேண்டும். ஷாட்ஸ் கடந்த 90 நாட்களில் 20 மில்லியன் (2 கோடி) ஷாட்ஸ் பார்வைகள் கடந்திருக்க வேண்டும். தற்போதுள்ள 4,000 மணி நேரம் மற்றும் 10 மில்லியன் ஷாட்ஸ் பார்வைகள் என்ற அளவுகோல் இனி இரண்டு மடங்காகிறது. சந்தாதாரர்களின் (எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இல்லை. வழக்கம் போல குறைந்தபட்சம் 1,000 சந்தாதாரர்கள் இருந்தாலே போதுமானது. ஏற்கனவே YPP-யில் இருக்கும் சேனல்களுக்கு என்ன பாதிப்பு? இந்த புதிய விதிகள் ஏற்கனவே YPP-யில் இணைந்திருக்கும் படைப்பாளிகளையும் விட்டுவைக்கவில்லை. ஷாட்ஸ் வீடியோக்கள் மூலம் தொடர்ச்சியாக விளம்பர வருமானம் பெற, அவர்கள் 90 நாட்களில் 10 மில்லியன் ஷாட்ஸ் பார்வைகளைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டே இருக்க வேண்டும். ஒருவேளை இலக்கைத் தவறவிட்டால்? கவலைப்படத் தேவையில்லை. இலக்கை எட்ட முடியாவிட்டாலும், நீள வீடியோக்கள் மூலம் ஈட்டும் வருமானம் தொடர்ந்து கிடைக்கும். மீண்டும் பார்வைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, ஷாட்ஸ் விளம்பர வருமானப் பகிர்வு தானாகவே செயல்படத் தொடங்கிவிடும். ஷாட்ஸ் விதிகளில் கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டாலும், சிறிய மற்றும் வளரும் சேனல்கள் வருமானம் ஈட்ட யூடியூப் சில மாற்று வழிகளை உறுதியளித்துள்ளது. யூடியூப் ஷாப்பிங் போனஸ்கள், பிராண்ட் கூட்டாண்மைக்கான சிறப்புச் சலுகைகள், புதிய டிரெண்டுகளைத் தொடங்கும் படைப்பாளிகளுக்கான பிரத்யேக சலுகைகள். யூடியூப்பின் Fan-funding தகுதி நிலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. 500 சந்தாதாரர்கள், 90 நாட்களில் 3 வீடியோக்கள் மற்றும் 3,000 மணிநேரப் பார்வைகள் (அல்லது 3 மில்லியன் ஷாட்ஸ் பார்வைகள்). இத்தகுதி நிலையை எட்டும் படைப்பாளிகள் Fan-funding மற்றும் யூடியூப் கருவிகள் மூலம் தொடர்ந்து பணம் ஈட்டலாம் ஆனால், இதில் விளம்பர வருமானம் கிடைக்காது. எந்தப் பார்வைகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்? பொதுவெளியில் பதிவேற்றப்பட்ட வீடியோக்களின் பார்வைகள் மட்டுமே 8,000 மணிநேரக் கணக்கில் சேர்க்கப்படும். ஷாட்ஸ் ஃபீடில் பெறப்பட்ட பார்வைகள் மட்டுமே கணக்கில் சேர்க்கப்படும். பிரைவேட் , அன்லிஸ்டெட் அல்லது நீக்கப்பட்ட வீடியோக்களின் பார்வைகள் இதில் சேர்க்கப்பட மாட்டாது. கூடுதல் தகவலாக, யூடியூப் நிறுவனம் தனது பீரிமியம் லைட் சேவையை மேலும் பல நாடுகளுக்கு விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் விளம்பரங்கள் தவிர்த்து, படைப்பாளிகளுக்குக் கூடுதல் சந்தா வருமானமும் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The Indian Express14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
8,000 வாட்ச் அவர்ஸ், 20 மில்லியன் ஷாட்ஸ் வியூஸ் கட்டாயம்: பிப்.1 முதல் அமலுக்கு வரும் யூடியூப்பின் புதிய விதிகள்
PulseNews சுருக்கம்

யூடியூப் தளத்தில் வருமானம் ஈட்டும் படைப்பாளிகளுக்கான தகுதி விதிகளில் முக்கியமான மாற்றங்களை அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி, விளம்பரங்கள் மற்றும் பிரீமியம் மூலம் வருவாய் பெற விரும்பும் படைப்பாளிகள், வரும் பிப்ரவரி 1, 2027 முதல் புதிய இலக்குகளை பூர்த்தி செய்ய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

புதிய விதிகளின்படி, நீண்ட வீடியோக்களுக்கு 8,000 வாட்ச் அவர்ஸ் மற்றும் ஷாட்ஸ் வீடியோக்களுக்கு 20 மில்லியன் பார்வைகள் என்ற புதிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. படைப்பாளர்களுக்கான இந்த வருவாய் ஈட்டும் தகுதிகள் இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளதாக யூடியூப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology