PulseNews
தொழில்நுட்பம்

Today Top Five News : 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!

இன்றைய டிஜிட்டல் உலகில் செய்தித்தாள்களை படிக்கும் பழக்கும் குறைந்து வருகிறது. செய்திகளை தொலைக்காட்சிகளில் பார்க்கும் வழக்கமும் அருகி வருகிறது. அவசர, அவசரமான வாழ்வில் தங்களுக்கு தேவையான செய்திகளை மக்கள் விரைவாக, பார்த்த நொடிகளிலேயே தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள். அதற்காக ஏபிபி நாடு முக்கியமான செய்திகளை மட்டும் தொகுத்து தலைப்புச் செய்திகளாக ஒரு சில வரிகளில் தருகிறது. இன்றைக்கு இதை மட்டும் நீங்கள் படித்தால் மட்டும் நாட்டில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் உங்கள் கவனத்தில் இருந்து விலகாது

வானிலை நிலவரம்

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் கடந்த சில மாதங்களாக உச்சத்தை தொட்டது.பல மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெப்பம் பதிவானது. இதனால் வீடுகளில் இருந்து வெளியே வரவே மக்கள் அச்சப்படும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளாவை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளில் மழையானது வெளுத்து வாங்கியது. இதே போல தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் மாலை நேரத்தில் மழை பெய்தது. இந்த நிலையில் வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வட தமிழகத்தில் மழையானது தீவிரம் அடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை மறுதினம் (14-08-2026) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல அடுத்த இரண்டு தினங்களுக்கும் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

ஆளுநர் அல்ல... பாஜக ஏஜெண்ட்! - புதுச்சேரி அரசியலில் புயலைக் கிளப்பிய நாராயணசாமியின் வீடியோ!

புதுச்சேரி: பாஜகவின் அரசியல் நிகழ்வில் பங்கேற்றதன் மூலம் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் நடுநிலை தவறி, பாஜகவின் ஏஜெண்டாகச் செயல்படுவது உறுதியாகி உள்ளதாக முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான வி. நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இச்செயலுக்கு ஆளுநர் பகிரங்க விளக்கம் அளிக்க வேண்டும் அல்லது தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்

தொகுதி மறுவரையறை தீர்மானம்: 'தமிழகப் பிரச்சினைகளை திசைதிருப்பும் நாடகம்' - டிடிவி தினகரன் சாடல்!

தொகுதி மறுவரையறை தொடர்பாக மத்திய அரசு எந்த ஒரு மசோதாவையும் நாடாளுமன்றத்தில் கொண்டு வராத நிலையில் அதனை எதிர்த்து தமிழக சட்டமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டிருக்கும் அரசினர் தீர்மானம் அவசியமற்றது என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

வைரல் இன்ஸ்டாகிராம் வ்ளாகருக்கு நடந்த சோகம்: பஸ் கண்டக்டருடன் ஓடிய மனைவி!

கேரளாவைச் சேர்ந்த பிரபல யூடியூபரும் இன்ஸ்டாகிராம் வ்ளாகருமான அகில் NRD-யின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள திடீர் திருப்பம் சமூக வலைதளங்களில் தற்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பல ஆண்டுகளாக தனது வாழ்க்கை, நண்பர்கள், நகைச்சுவை சம்பவங்கள் மற்றும் அன்றாட நிகழ்வுகளை மையமாக வைத்து கன்டென்ட் உருவாக்கி வந்த அகில், தற்போது தனது மனைவி மேகா தொடர்பான விவகாரத்தால் பேசுபொருளாகியுள்ளார்.

உயரும் தங்கம் விலை- காரணம் என்ன.?

தங்கத்தின் விலையானது தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அந்த வகையில் கடந்த 5 ஆண்டுகளில் ஒரு சவரனுக்கு மட்டும் சுமார் ஒரு லட்சம் ரூபாய் அளவிற்கு தங்கம் விலை அதிகரித்துள்ளது. 2026ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஒரு சவரன் 1.34 லட்சம் என்ற உச்சத்தை தொட்டு நகைப்பிரியர்களை தலை சுற்ற வைத்தது. இந்த நிலையில் ஈரான்- அமெரிக்கா போர் காரணமாக கச்சா எண்ணெய் தட்டுப்பாடு அதிகரித்ததால் விலையும் உயர தொடங்கியது. இதனால் முதலீட்டாளர்கள் தங்கத்திற்கு பதிலாக கச்சா எண்ணெய் மீது தங்களது முதலீட்டை செலுத்தினர். இதனால் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்ததால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Abp News13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
Today Top Five News : 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
PulseNews சுருக்கம்

இன்றைய காலகட்டத்தில் மக்கள் செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் செய்திகளைப் பார்ப்பதைக் காட்டிலும், மிக விரைவாக தகவல்களை அறிந்துகொள்ளவே விரும்புகின்றனர். பிஸியான வாழ்க்கை முறையில், முக்கியமான நிகழ்வுகளை மட்டும் எளிதாகத் தெரிந்துகொள்ள ஏபிபி நாடு இந்தச் செய்தித் தொகுப்பை வழங்குகிறது.

இன்றைய ஐந்து முக்கிய செய்திகளை இந்தத் தொகுப்பின் வாயிலாகத் தெரிந்துகொள்வதன் மூலம், நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை நீங்கள் தவறவிடாமல் உடனுக்குடன் அறிந்து கொள்ள முடியும்.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology