PulseNews
தொழில்நுட்பம்

ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!

கார் வாங்க திட்டமிடுகிறீர்களா? இதுதான் சரியான நேரம்.

இந்தியாவில் பண்டிகைக் காலங்களில் புதிய கார் வாங்குவது மிகவும் சிறந்த தருணமாகும். ஏனெனில் நிறுவனங்கள் பல கவர்ச்சிகரமான சலுகைகளை வழங்குவதால் அதிக சேமிப்பை பெறலாம். அந்த வகையில் JSW MG மோட்டார் இந்தியா நிறுவனம் 'எம்ஜி பொன்னோணம் பண்டிகை கால சிறப்புச் சலுகை 2026' என்பதை அறிவித்துள்ளது. இந்த சலுகையின் கீழ், புதிய எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை மாபெரும் தள்ளுபடி கிடைக்கிறது.

இதில் ரொக்கத் தள்ளுபடி, இலவச எலக்ட்ரிக் சார்ஜிங், 1 கிராம் தங்க நாணயம் மற்றும் கவர்ச்சிகரமான எக்ஸ்சேஞ்ச் போனஸ் ஆகியவை அடங்கும். எம்ஜி மோட்டார் தனது பெட்ரோல் மற்றும் எலக்ட்ரிக் என அனைத்து கார்களுக்கும் இச்சலுகைகளை நீட்டித்துள்ளது. எந்தெந்த மாடலுக்கு எவ்வளவு சலுகைகள் கிடைக்கும் என்பதை விரிவாகக் காண்போம்.

எந்தெந்த மாடலுக்கு எவ்வளவு

மிகப்பெரிய தள்ளுபடி எம்ஜி ஆஸ்டர் காருக்கு வழங்கப்படுகிறது. AI தொழில்நுட்பம் கொண்ட இந்த பெட்ரோல் எஸ்யூவியை வாங்கினால் ரூ.2.20 லட்சம் வரை சேமிக்கலாம். இதன் ஆரம்ப எக்ஸ் ஷோரூம் விலை ரூ.9.79 லட்சம் என்பதால், ரொக்கம் மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைக்குப் பின் இது மலிவானதாக மாறும். பிரிவில் சிறந்த வடிவமைப்பு, பிரீமியம் உட்புறம், மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களுக்காக இந்த எஸ்யூவி தேர்வு செய்யப்படுகிறது.

பிரீமியம் எலக்ட்ரிக் எஸ்யூவி

நீங்கள் நீண்ட ரேஞ்ச் தரும் பிரீமியம் எலக்ட்ரிக் எஸ்யூவியை வாங்க விரும்பினால், எம்ஜி ZS EV ஒரு சிறந்த வாய்ப்பாகும். இதில் வாடிக்கையாளர்களுக்கு ரூ.2.15 லட்சம் வரை நேரடி சலுகைகள் வழங்கப்படுகின்றன. மேலும், 2,000 யூனிட்கள் வரை முற்றிலும் இலவச சார்ஜிங் சலுகையும் உண்டு. ரூ.13 லட்சம் ஆரம்ப விலையில் கிடைக்கும் காரின் பேஸ் மாடலுக்கும் இது பொருந்தும். இலவச சார்ஜிங் மற்றும் பெரும் தள்ளுபடியால் EV வாங்குபவர்களுக்கு இது மிகவும் லாபகரமான டீலாக இருக்கும்.

எம்ஜி விண்ட்சர் எலக்ட்ரிக் காருக்கு எப்படி?

அதிகம் விற்பனையாகும் எம்ஜி விண்ட்சர் எலக்ட்ரிக் காருக்கு 1,000 யூனிட் இலவச சார்ஜிங் மற்றும் 1 கிராம் தங்க நாணயம் என ரூ.20,000 மதிப்புள்ள சலுகைகள் கிடைக்கின்றன. இதன் ஆரம்ப விலை ரூ.9.99 லட்சம் மற்றும் கிலோமீட்டருக்கு ரூ.3.99 பேட்டரி வாடகை திட்டத்தில் கிடைக்கிறது. நிறுவனத்தின் மிகச்சிறிய காம்பேக்ட் எலக்ட்ரிக் ஹேட்ச்பேக் வடிவமைப்பு கொண்ட எம்ஜி காமெட் இவி காரில் ரூ.45,000 வரை சேமிக்கலாம். அத்துடன் 1 கிராம் தங்க நாணயமும் பரிசாக வழங்கப்படுகிறது.

எம்ஜி-யின் மிகவும் பிரபலமான ஹெக்டர் எஸ்யூவி காரின் ஆரம்ப விலை இந்தியாவில் ரூ.11.99 லட்சம் ஆகும். இதில் பண்டிகை காலத்தில் ரூ.60,000 வரை சலுகைகள் கிடைக்கின்றன. மேலும், ஹெக்டர் புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 1 கிராம் தங்க நாணயம் பரிசளிக்கப்படுகிறது.

பெரிய அளவு, தாராளமான இடவசதி, பெரிய டச்ஸ்கிரீன் சிஸ்டம் போன்ற வடிவமைப்பு கொண்ட சக்திவாய்ந்த எஸ்யூவியை தேடுபவர்களுக்கு ஹெக்டர் காரின் இந்த தள்ளுபடி கண்டிப்பாக மிகச் சிறந்த தேர்வாக அமையும்.

Abp News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
PulseNews சுருக்கம்

புதிய கார் வாங்கத் திட்டமிடுபவர்களுக்கு இது மிகச்சிறந்த தருணமாகும். பண்டிகைக் காலங்களில் கார் நிறுவனங்கள் வழங்கும் சிறப்புச் சலுகைகள் மூலம் வாடிக்கையாளர்கள் அதிக சேமிப்பை பெற முடியும்.

இதனை முன்னிட்டு, ஜே.எஸ்.டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் 'எம்ஜி பொன்னோணம் பண்டிகை கால சிறப்புச் சலுகை 2026' என்ற திட்டத்தை அறிவித்துள்ளது. இந்தச் சலுகையின் கீழ், குறிப்பிட்ட எம்ஜி ரக கார்களுக்கு ரூ. 2.20 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology